அவமானத்துடன் வெளியேறிய ஆதிரைக்கு இலட்சங்களில் சம்பளம்- எவ்வளவு தெரியுமா?
பிக்பாஸ் சீசன் 9-ல் மூன்றாவது வாரத்தில் வெளியேறிய சீரியல் நடிகை ஆதிரைக்கு வழங்கப்பட்ட சம்பள விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 9
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் 5ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது. அதில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள்.
இதுவரையில், 3 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில், நேற்றைய தினம் ஆதிரை நான்காவது ஆளாக வெளியேறியுள்ளார்.
ஆதிரை- எப். ஜே இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் நடத்திய காதல் லீலைகள் இணையத்தில் பேசும் பொருளாக மாறியது. பார்வதி - கம்ருதீன் இருவரும் செய்யும் வேலைகளுக்கு மக்கள் அவர்கள் பக்கம் உள்ள கொந்தளிப்புக்களை வழங்கி வருகிறார்கள்.

சம்பளம் எவ்வளவு தெரியுமா?
இந்த நிலையில், நேற்றைய தினம் தன்னுடைய மோசமான நடத்தைகளால் வெளியேறும் ஆதிரைக்கு பிக்பாஸ் சில அறிவுரைகளை வழங்கினார்.
அதாவது, பிக்பாஸ் வீட்டில் இருந்து செல்லும் முன்னர் ஆதிரை சக போட்டியாளர்களுக்கு விமர்சனங்களை வழங்க வேண்டும் என கூறியதும், ஆதிரை உடனே அவருடைய காதலன் எப். ஜே, அவருடைய நண்பியான கெமி மற்றும் திவாகரன் ஆகியோருக்கு விமர்சனங்களை வழங்கினார்.

இதனை தொடர்ந்து பேசிய பிக்பாஸ், “ஆதிரை வெளியேறுவதற்கு தகுதியானவர் அல்ல. நீங்கள் வெளியேறுவது வருத்தமாக உள்ளது.” என அவரும் ஆதரவாக பேசினார். பல விமர்சனங்களுக்கு மத்தியில் வெளியில் வரும் ஆதிரைக்கு ஒரு நாளைக்கு 18 000 ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளது.
அதன்படி அவர் 21 நாட்கள் இருந்துள்ளார். அதற்கான சம்பளம், வரி பணத்தை கழித்து பார்க்கும் பொழுது 264, 600 ரூபாய் இருக்கலாம் என சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இவ்வளவு நாட்களாக வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் இருந்த ஆதிரைக்கு இவ்வளவு சம்பளமா? என இணையவாசிகள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |