Baakiyalakshmi : அடாவடித்தனமாக விசாரணையை ஆரம்பித்த அதிகாரி- நடுநடுங்கி நிற்கும் குடும்பத்தினர்!
கமலாவின் புகார் அடிப்படையில் பொலிஸார் ஈஸ்வரி மீது விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் 1000 எபிசோடை கடந்து ஓடி கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டதால் இன்று வரை சுவாரஸ்யமாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
அந்த வகையில், ராதிகா கர்ப்பமாக இருக்கும் பொழுது பாக்கியா வீட்டில் ஏற்பட்ட சண்டையால் ராதிகாவுடன் ஈஸ்வரியும் கிளம்பி அவர் வீட்டிற்கு சென்று விட்டார்.
ஈஸ்வரி, ராதிகாவுடன் அவர் வீட்டிற்கு வந்தது கமலாவிற்கு பிடிக்கவில்லை. இதனால் நாளுக்கு நாள் வீட்டில் சண்டையாகவே இருந்தது.
கைது செய்ய விரைந்த பொலிஸார்
இந்த நிலையில் வீட்டில் கோபி இல்லாத நேரம் ராதிகா தவறி விழுந்து விட்டு அதற்கு காரணம் ஈஸ்வரி தான் என கோபியிடம் கூறி விட்டார்.
தவறி விழுந்த காரணத்தால் ராதிகா - கோபியின் குழந்தையும் கலைந்து விட்டது. இதனை ஒரு காரணமாக எடுத்துக் கொண்டு ஈஸ்வரியை அசிங்கப்படுத்தி கமலா வெளியே அனுப்பி விட்டார்.
இந்த சம்பவம் கோபி, ஈஸ்வரி என அனைவரையும் பாதித்துள்ளது. தற்போது கமலா இந்த விடயத்தை ஒரு புகாராக பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்துள்ளார். இதனால் பொலிஸார் பாக்கியா குடும்பத்தினர் மீது விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
உடனே பாக்கியா வீட்டிற்கு விரைந்த பொலிஸார் ஈஸ்வரி வீட்டில் இல்லாத காரணத்தால் வீட்டிலுள்ளவர்களை மிரட்டிக் கொண்டிருக்கிறார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ காட்சி வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |