38 மனைவிகள், 89 குழந்தைகள், 33 பேரக்குழந்தைகள்... குடும்பத்தலைவர் திடீர் மரணம்
38 மனைவிகளின் கணவரும் , 89 குழந்தைகளின் தந்தையும், 33 பேரக்குழந்தைகளின் தாத்தாவுமான ஜியோனா சானா(76) உடலக்குறைவால் நேற்று காலமானார்.
ரத்த அழுத்தம் , நீரிழிவு பிரச்சனை காரணமாக மிசோரம் தலைநகர் ஐஸ்வாலில் ட்ரினிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று உயிரிழந்தார்.
வடகிழக்கு மாநிலம் மிசோரம் பக்தாவங் தங்குணம் கிராமத்தில் வசித்தவர் ஜியோனா. இவருக்கு 38 மனைவிகள். இத்தனை மனைவிகளின் வழியாக ஜியோனாவுக்கு 89 குழந்தைகள் உள்ளனர். அவர்களில் பலருக்கும் திருமணம் ஆகிய நிலையில், தற்போது ஜியோனாவுக்கு 33 பேரக்குழந்தைகள் உள்ளனர்.
இத்தனை பேரும் ஒரே இடத்தில் வசிப்பதுதான் ஆச்சரியம். 4மாடி கட்டிடம் வீட்டில் 100க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. இத்தனை பேருக்கும் மொத்தமாக சேர்த்து சமையல் செய்யப்படுகிறது.
உலகிலேயே மிகப்பெரிய குடும்பம் என்ற பெயர் பெற்றுவிட்டதால், மிசோரமில் இருக்கு ஜியோனா இல்லம் ஒரு சுற்றுலா தளமாகவே மாறிவிட்டது.
ஜியோனா குடும்பத்தை பார்க்கவே பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பல்வேறு நாடுகளில் இருந்தும் வந்து போகிறார்கள்.
21.7.1945ல் பிறந்த ஜியோனா சானா தனது 17வது வயதில் முதல் திருமணத்தை செய்துகொண்டார். உடலக்குறைவால் ஜியோனா மறைந்துவிட்டாலும், அவரது புகழ் உலகம் முழுவதும் பரவிக்கிடக்கிறது.
38 மனைவிகள்-89 குழந்தைகள் என்று மிசோரம் முதல்வர் ஜோரம் தங்கா குறிப்பிடிருந்தாலும், ஜியோனாவுக்கு 39 மனைவிகள் என்றும், 94 குழந்தைகள் என்றும் பலரும் கூறுகின்றனர்.


