வாரத்துக்கு 300 கிராமுக்கு மேல் சிக்கன் சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? எச்சரிக்கும் ஆய்வு தகவல்!
பொதுவாகவே அசைவ பிரியர்களின் விருப்பப்பட்டியலில் சிக்கன் முக்கிய இடத்தை பிடித்துவிடுகின்றது. குறிப்பாக, சிக்கன் மீதான நாட்டம் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் அதிகரித்து வருகிறது.
கோழி இறைச்சியில் உடல் செயல்பாடுகளுக்கு இன்றியமையாத அத்தியாவசிய அமினோ அமிலங்கள் செறிந்து காணப்படுகின்றது. மேலும், இதில் வைட்டமின் பி போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் காணப்படுவதால், இவை ஆற்றல் உற்பத்திக்கு உதவுவதுடன், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.
கோழி இறைச்சியானது பொதுவாக சிவப்பு இறைச்சிக்கு ஆரோக்கியமான மாற்றீடாக கருதப்பட்டாலும், வாரத்திற்கு 300 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் கோழிக்கறியை சாப்பிடுவது இரைப்பை குடல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் என சிக்கன் பிரியவர்ககளுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் ஆய்வுத்தகவல்கள் வெளியாகியுள்ளது.
புற்றுநோய் வருமா?
அமெரிக்க உணவு வழிகாட்டுதல்கள் (Dietary Guidelines for Americans (2020-2025) இன் ஆய்வறிக்கையின் பிரகாரம், கோழி இறைச்சி வாரத்திற்கு ஒன்று முதல் மூன்று முறை, 100 கிராம் வரை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது என குறிப்பிடப்படுகின்றது.
குறித்த ஆய்வின் முடிவுகள் சிக்கன் புற்றுநோய் தொடர்பானா அபாயத்தை அதிகரிக்கிறது என்றாலும் அதனை உறுதிப்படுத்த பதப்படுத்தப்பட்ட சிக்கன் மற்றும் உடற்பயிற்சி போன்ற வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் தொடர்பில் மேலும் சில ஆய்வுகள் தேவைப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
எவ்வாறாயினும் சிக்கனை அளவோடு சாப்பிடுவதே சிறந்தது. அதிகமாக சிக்கன் சாப்பிட்டால் புற்றுநோய் வருமா என்ற கேள்வியில் 300 கிராம் சிக்கன் சாப்பிட்டால் புற்றுநோய் வர வாய்ப்புண்டு என்ற எச்சரிக்கை மணியை இந்த ஆய்வு கொடுத்துள்ளது.
இந்த ஆய்வு ஒரு எச்சரிக்கை மட்டுமே. சிக்கன் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என அதில் குறிப்பிடப்படவில்லை ஆனால், எந்த உணவையும் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது ஆபத்து. சிக்கனையும் அளவுடன் எடுத்துக்கொண்டால் ஆரோக்கியம் சீராக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |