73 வயது பாட்டியின் வயிற்றில் 35 ஆண்டுகளாக வளர்ந்த குழந்தை: பின்னணியில் பகீர் காரணம்
73 வயது மூதாட்டி 35 ஆண்டுகளாக கருவில் சுமந்து வந்த கல் குழந்தையை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.
அல்ஜீரியாவின் ஸ்கிக்டாவைச் சேர்ந்த 73 வயது மூதாட்டி, ஒருவருக்கு சமீபத்தில் வயிற்றில் வலி ஏற்பட்டதையடுத்து, மருத்துவர்கள் அவரது வயிற்றினை சோதனை செய்துள்ளனர்.
அப்போது வயிற்றில் குழந்தை இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் அவரின் வயிற்றில் குழந்தை உருவாகி அந்த குழந்தை கல்லாக மாறியுள்ளதும், கிட்டதட்ட 35 ஆண்டுகளுக்கும் மேலாக வயிற்றில் ஒரு கல் குழந்தையுடன் மூதாட்டி நடமாடி வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
சுமார் 2 கிலோ எடை கொண்ட இந்த கல் குழந்தை 7வது மாதம் வரை வளர்ச்சியடைந்து கல்லாக மாறியுள்ளது. மருத்துவ உலகில் இவ்வறான கருவை லித்தோபிடியன் lithopedion என்று கூறுகிறார்கள்.
கருமுட்டையில் கரு உருவாகாமல் அடி வயிற்றில் கரு உருவானால் அதை லித்தோபிடியன் lithopedion என் அழைக்கிறார்கள். இவ்வாறாக சாதாரணமாக எல்லோருக்கும் கரு உருவாக வாய்ப்புள்ளது.
ஆனால் அவ்வாறாக உருவாகும் கரு ஒரிரு நாளில் தானாக வெளியேறிவிடும். அடி வயற்றில் ஏதாவது பாதிப்பு இருந்தால் அது உடனடியாக சிக்கலை ஏற்படுத்துமாம்.
குறிப்பிட்ட இந்த மூதாட்டி 35 ஆண்டுகளுக்கு முன்பு இவரது வயிற்றுக்குள் சென்ற கரு அடி வயற்றிகுள் சென்று அங்கிருந்து வெளியேற முடியாமல் அங்கேயே வளர்ச்சியடைந்துள்ளது.
பின்னர். சுமார் 7 மாதம் வளர்ந்த கரு பின்னர் வளர்ச்சியடையாமல் இருந்துள்ளது. கரு முட்டைக்குள் குழந்தை இல்லாததால் அவருக்கு அந்த காலத்தில் மாதவிடாயும் சரியாக இருந்துள்ளது.
ஆனால் உடல் எடை மட்டும் கூடியுள்ளது. வயது முதிர்வின் காரணமாக கூடியிருக்கும் என அவர் கருதிய நிலையில் தற்போது தான் அது குழந்தை என தெரியவந்துள்ளது.
