3 வயது குழந்தையை கழுத்தை துடிக்க துடிக்க கொலை செய்த தாய்: முகம்சுழிக்க வைக்கும் காரணம்
பொள்ளாச்சி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 3 வயது பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த தம்மம்பதி மலைக்கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரோஜினி. இவர்களது 3 வயது மகள் நிவன்யாஶ்ரீ.
இந்நிலையில், கடந்த 14ம் தேதி மணிகண்டன் வேலைக்கு சென்ற நிலையில், குழந்தைக்கு உடல்நலம் சரியில்லை என கூறி சரோஜினி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக கூறியுள்ள நிலையில், குழந்தையின் மரணத்தில் மருத்துவர்களுக்கு சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்து, நேரடியாக வந்த பொலிசார், குழந்தையின் தாயிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணமாக பதில் அளித்ததால் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதில், சரோஜினிக்கு, சர்கார்பதி மலைவாழ் குடியிருப்பை சேர்ந்த பொம்மன்(23) என்பவருடன் கள்ளத் தொடர்பு இருந்து வந்ததும், தங்களது உறவுக்கு இடையூறாக இருந்ததால் குழந்தையை கழுத்தை நெரித்துக்கொன்று விட்டு நாடகமாடியது தெரிய வந்தது.
தற்போது குறித்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த பொலிசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.