பாம்பை கடித்து சாப்பிட்ட 3 வயது சிறுவன்... மருத்துவமனையில் கண்ணீர் சிந்திய பெற்றோர்
உத்தர பிரதேசத்தில் 3 வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில் பாம்பை கடித்து சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாம்பை கடித்து சாப்பிட்ட சிறுவன்
உத்தரபிரதேச மாநிலம் பரூக்பாத் மாவட்டத்தில் உள்ள மத்னாபூரில் வசிப்பவர் தினேஷ்குமார். இவரது மகன் ஆயுஷ்(3) வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்துள்ளான்.
அப்பொழுது பாட்டியின் அலறல் சத்தம் கேட்ட நிலையில், பதறிப்போன பெற்றோர் வெளியே வந்து பார்த்த போது ஆயுஷ் வாயில் எதையோ மென்று சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.
இதனை அவதானித்த பெற்றோர் வாயில் வைத்து சாப்பிடுவது என்ன என்று எடுத்து பார்த்த போது, அது பாம்பு என்று தெரிந்ததும் அதிர்ச்சியடைந்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
மருத்துவமனையில் 24 மணி நேர கண்காணிப்பில் இருந்த சிறுவன் தற்போது அபாய கட்டத்தை தாண்டியுள்ளதாகவும், குணமடைந்து வீட்டிற்கு செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.