பகீர் கிளப்பிய சூனியக்காரிகளின் மரணம்! பில்லி சூனியம் செய்த 3 பெண்களுக்கு நேர்ந்த கதி
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டத்தில், பில்லி சூனியம் வைத்ததாக 3 பெண்களை கிராம மக்கள் சரமாரியாக அடித்து கொடூரமாக கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கொலை சோனஹபுத் காவல் சரகத்திற்கு உட்பட்ட ரானாடி கிராமத்தில் நிகழ்ந்துள்ளது.
இறந்துபோன ஒரு பெண்ணிண் கணவர், மகன் உள்பட 13 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, எட்டு பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாந்த்ரீகம் செய்த பெண்களுக்கு நேர்ந்த கொடுமை
இந்த 3 பெண்களும் மாந்த்ரீகம் , பில்லி சூனியம் செய்து மக்களை அச்சுறுத்தி வந்ததாகவும், அவர்கள் வைத்த சூனியத்தால் கிராமத்தைச் சேர்ந்த சிலரை பாம்பு கடித்ததாகவும் கூறி கிராம மக்கள் அவர்களை சரமாரியாக அடித்து கொலை செய்துள்ளனர்.
பின்னர் அருகில் உள்ள மலைப் பகுதியில் உடல்களை தூக்கி வீசியுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தேசிய குற்றப் பதிவுகள் ஆணைய தரவுகளின்படி, ஜார்க்கண்ட் மாநிலத்தில் பில்லி சூனியம் விவகாரத்தால் 2001இல் இருந்து 2020 வரை 590 பேர் கொல்லப்பட்டுள்ளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.