சினிமா பாணியில் சீரியல்கள்.. மணிநேர அப்பேட்- சின்னத்திரை ரசிகர்கள் மெகா சர்ப்ரைஸ்
சினிமாவை போன்று மணி நேரக் கணக்கில் சீரியலும் ஒளிபரப்பத் திட்டமிடப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
மகா சங்கமம்
தற்போது சினிமாவை விட மக்கள் சின்னத்திரை சீரியல்கள் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
சினிமா படங்களில் இரண்டு படங்களை ஒன்றாக்கி அதிலிருந்து ஒரு புதிய இணைப்பை ரசிகர்களுக்கு கொடுத்து படத்தை வேறுப்பக்கம் கொண்டு செல்வது சமீபகாலமாக இயக்குநர்களின் வேலையாக இருந்து வருகிறது.
வெள்ளத்திரையை போன்று சின்னத்திரையிலும் இது போன்று ஒரு இணைப்பு உருவாகி ரசிகர்களுக்கு திருப்பங்களை குவிக்கப்போகிறது.
அந்த வகையில், கடந்த காலங்களில் நாம் கண்டு மகிழ்ந்த சின்னத்திரை சீரியல்களின் “மகா சங்கமம்” ஒளிபரப்பாகவுள்ளது. ஒரே நேரத்தில் மூன்று சீரியல்கள் ஒன்றினைத்து குறித்த தொடர் செல்லும்.
நிலை தடுமாறும் சீரியல்
இந்த நிலையில், பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் அன்னம், கயல் மற்றும் மருமகள் ஆகிய மூன்று சீரியல்களும் செப்டம்பர் 15-ம் தேதி முதல் மெகா சங்கமம் என்ற பெயரில் ஒளிபரப்பாகவுள்ளது.
மூன்று சீரியல்களும் ஒரே கதைக்குள் இணைந்து பயணிக்கும் பொழுது ரசிகர்களுக்கு இன்னும் பரபரப்பு அதிகரிக்கும்.
தொடர்ந்து ஒன்றரை மணிநேரம் ஒளிபரப்பாக உள்ளதால் எந்த அளவு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இந்த புதிய முயற்சியால் தொலைக்காட்சியின் டிஆர்பி உயரும் என்றும், இத்தனை நாள் முதலிடத்தில் இருந்த சிங்கப்பெண்ணே சீரியல் தன்னுடைய நிலை தடுமாறும் என்றும் சின்னத்திரை ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |