திருமணமாகி 8 மாதத்தில் விவாகரத்தா? விளக்கம் கொடுத்த சிறகடிக்க ஆசை வெற்றி
திருமணமாகி 8 மாதங்களே ஆன நிலையில், வெற்றிக்கும் வைஷ்ணவிக்கும் விவாகரத்து என பல யூடியூப் சேனல்களில் அண்மை காலமாக வதந்திகள் பரவிவந்தது. இது குறித்து வெற்றி விளக்கம் கொடுத்துள்ளார்.
வெற்றி வசந்த் - வைஷ்ணவி
சின்னத்திரையில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தான் வெற்றி வசந்த். youtube மூலம் பிரபலமாகிய இவர் தற்போது சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான இந்த சீரியல் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. முத்து என்கிற கதாபாத்திரத்தில் வெற்றி வசந்த் கலக்கிக்கொண்டிருந்த நிலையில், சின்னத்திரை நடிகை வைஷ்ணவியை காதலிப்பதாக அறிவித்தார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பொன்னி சீரியலில் கதாநாயகியாக நடித்த நடிகை வைஷ்ணவியை இந்த ஆண்டு தொடக்கத்தில் திருமணம் செய்துக்கொண்டார்.இவர்களின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிலையில், திருமணமாகி 8 மாதங்களே ஆன நிலையில், வெற்றிக்கும் வைஷ்ணவிக்கும் விவாகரத்து என பல யூடியூப் சேனல்களில் அண்மை காலமாக வதந்திகள் பரவிவந்தது. இதனால் மிகுந்த வேதனை அடைந்த வெற்றி, ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியில் இதற்குப் பதில் அளித்துள்ளார்.
வெற்றி வசந்த் ஓபன் டாக்
தன்னைப் பற்றி யாரும் உண்மையில் அறியாத நிலையில், யூடியூப் சேனல்கள் வருவாய்க்காக வதந்திகளைப் பரப்பி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
"விஜய் சேதுபதிக்கு வில்லன், சொகுசு பங்களாவில் வாழ்க்கை, விவாகரத்து" எனப் பல பொய்யான தலைப்புகளைச் சுட்டிக்காட்டி, இவை அனைத்தும் உண்மையற்றவை அது அவர்களின் பார்வையாளர்கனை அதிகரிப்பதற்காக மட்டுமே செய்யப்படுகின்றது.என குறிப்பிட்டுள்ளார்.
வெற்றி வசந்த் மேலும் குறிப்பிடுகையில், இந்த விவாகரத்து வதந்திகள் தன்னை விடவும் தனது பெற்றோர்கள், மாமியார் மற்றும் உறவினர்களுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், நடிகராக இருக்கும்போது இதுபோன்ற வதந்திகளையும், மக்களின் அன்பையும் ஒரே நேரத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கின்றது என குறிப்பிட்டதுடன், தனது மனைவி இதுபோன்ற வதந்திகளைப் பார்த்துச் சிரித்துவிடுவார் என்றும், அதனால் அது தன்னை அவ்வளவாகப் பாதிப்பதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
