3 கிரகங்களின் வக்ர பெயர்ச்சி - உலகளவில் இயற்கை ஆபத்து: அன்றே கணித்த பாபா வங்கா
ஜோதிட ரீதியாக பல சிரகங்களின் பெயர்ச்சி பலவாறு ராசிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் இந்த வக்ர பெயர்ச்சி அப்படி இல்லை.
ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு ராசியில் குறைந்த பட்சம் இத்தனை நாட்கள் முதல் இத்தனை ஆண்டுகள் வரை சஞ்சரிக்கும் என்ற நாள் எண்ணிக்கை இருக்கும்.
அவ்வாறு ஒவ்வொரு பெயர்ச்சியின் பொழுதும் சில கிரகங்கள் வக்கிரமாகி அதாவது பின்னோக்கி சஞ்சரிக்கும். இந்த நிலையில் நவம்பர் மாதத்தில் மூன்று பெரிய கிரகங்கள் வக்கிரம் பெற்று பின்னோக்கி பெயர்ச்சியடைய இருக்கின்றன.
இதனால் என்னென்ன மாற்றங்கள் நிகழும் யாருக்கு கிரகங்களில் வக்கிர பெயர்ச்சி யோகம் என்று பார்க்கலாம்.

கிரகங்களின் வக்கிர பெயர்ச்சி
இந்த வக்ர பெயர்ச்சி நவம்பர் மாதம் 10ஆம் தேதி முதல் நவம்பர் 28 வரை இருக்கும். இதனால் எதிர்ப்பாராத வகையில் ஏதாவது ஒரு சம்பவம் நடக்கும் என ஜோதிட ரீதியாக கூறப்பட்டுள்ளது.
இந்த மூன்று கிரகங்கள் வக்கிரமாகி இருப்பது, உலக அளவில் ஒரு சில விஷயங்களில் பதட்டத்தை ஏற்படுத்தும். நவம்பர் மாதம் இடைப்பட்ட காலத்தில் இயற்கை அழிவுகள் அதாவது மழை வெள்ளம் ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது.
- புதன் வக்கிர பெயர்ச்சி: நவம்பர் மாதம் 10ஆம் தேதி விருச்சிக ராசியில் சஞ்சரிக்கும் புதன் வக்கிரமாகி, மாதம் இறுதி வரை பின்னோக்கிய நிலையிலையே சஞ்சரிப்பார்.
- குரு வக்கிர பெயர்ச்சி: நவம்பர் மாதம் 11-ம் தேதி கடக ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிக்கும் குருபகவான் வக்கிரமாகி டிசம்பர் மாதம் 5-ம் வரை கடக ராசியில் வக்கிரமாகி சஞ்சரிப்பார்.
- சனி வக்கிர பெயர்ச்சி: ஜூலை மாதத்தில் இருந்து வக்கிரமாகி சஞ்சரித்து வரும் சனி பகவான், நவம்பர் 28 வரை வக்கிர நிலையில் இருப்பார்.

கிரகங்களின் வக்ரத்தால் நடக்கும் பிரச்சனை
இந்த கிரக பெயர்ச்சியால் ராசிகளுக்கு மற்றும் அல்ல உலகளவிலும் பிரச்சனைகள் வரும். பொதுமக்கள் இடையே ஏதோ ஒரு விதத்தில் சமூகத்தில் விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு அமைதியின்மை உண்டாகலாம்.
அதாவது போராட்டம் ஒற்றுமை இல்லாமல் ஒருவரை ஒருவர் அடித்து கொள்வார்கள்.
ஏற்கனவே கணித்திருப்பது போல நவம்பர் மாதத்தில் மழை மற்றும் வெள்ளம் சார்ந்த இயற்கை இடர்கள் ஏற்படுவதற்கான சாத்தியம் இருக்கிறது.

தற்போது வரை சில நாடுகளுடன் போர் நடந்து வருகிறது. அமையின்மை நிலவுகிறது. இதனால் மக்கள்பதற்றத்துடன் செயற்பட்டு கொண்டு இருக்கிறது. இதனால் இது தொடர்பில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
கும்ப ராசியில் ராகு சஞ்சரித்து வரும் நிலையில் தொழில்நுட்ப ரீதியாக ஏற்பட்டு வரும் பெரிய மாற்றங்கள் உண்டாகலாம். இந்த பொருளாதார ரீதியான தாக்கத்தை பாபா வங்காவும் கணித்துள்ளார்.

ஆனால் இந்த வக்ர பெயர்ச்சி குறிப்பிட்ட சில நாட்கள் மட்டுமே நீடிக்கிறது என்பதால் அதை எதற்கும் பயப்பட தேவை இல்லை ஆனால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
எனவே திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தைகளை, புதிய முயற்சிகளை இந்த காலகட்டத்தில், அதாவது நவம்பர் மாத இறுதிவரை தவிர்ப்பது நல்லது. மொத்ததில் வாழ்க்கையை மாற்றும் புதிய மாற்றங்களை தொடங்க வேண்டாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).