இந்த ராசிகளிடம் ஜாக்கிரதையா இருங்க! bully பண்ணுவதில் கில்லாடிகளாம்
பொதுவாகவே சில மனிதர்கள் மற்றவர்களின் உணர்வுகளுக்கு சிறிதும் முக்கியத்துவம் கொடுக்காதவர்களாக இருப்பார்கள்.
தங்களை போல் மற்றவர்களையும் நினைக்காதவர்கள், மற்றவர்களை காயப்படுத்துவதை ஒரு பொழுதுப் போக்காக எடுத்துக்கொள்வார்கள்.
இன்றும் சிலர் தாங்கள் அனுபவித்த மன கசப்பான சூழ்நிலைகளை மற்றவர்களுக்கு கொடுத்து இதில் ஆறுதல் தேடும் கொடூரமான மனநிலை கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவ்வாறான எதிர்மறை எண்ணங்களுக்கும் ஒருவருடைய பிறப்பு ராசிக்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்தவகையில் மற்றவர்களை அழவைத்து அல்லது துன்புறுத்தி அதில் இன்பம் காணும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
போரின் கிரகமான செவ்வாயால் ஆளப்படும் மேஷ ராசியினரிடம், அமைதியானவர்களை தேர்ந்தெடுத்து கொடுமைப்படுத்தி ரசிக்கும் குணம் இயல்ப்பாகவே இருக்கும்.
இதனை அவர்கள் வேண்டுமென்றே செய்கின்றார். இவர்களுக்கு அதிக கோபம் வரும் நேரங்களில் இவ்வாறு நடந்துக்கொள்ளுவார்கள். இவர்களால் தங்களின் கோபத்தை ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது.
இவர்களுக்கு ஒருவரைத் துன்புறுத்த சரியான ஒரு காரணம் இருக்க வேண்டும் என்பது கிடையாது. யாரையாவது துன்புறுத்த நினைத்து விட்டால் போதும், அந்த நபரின் மனதை உடைக்கும் வரையில் விடவே மாட்டார்கள்.
ரிஷபம்
காதலின் கிரகமான சுக்கிரனால் ஆளப்பட்டாலும் கூட ரிஷப ராசியினர் சில சமயம் தங்களுக்கு பிடிக்காதவர்களை மிகவும் மோசமாக நடத்துவார்கள்.
இரக்க குணத்துக்கு பெயர் பெற்ற இவர்கள்? ஒருவரை கிண்டல் செய்யவோ அல்லது புண்படுத்தவோ முடிவெடுத்து விட்டார்கள் என்றால் இவர்களின் மறுபக்கத்தை காட்டிவிடுவார்கள்.
இவர்கள் தங்களுக்கு துரோகம் செய்தவர்களை பெரும்பாலும் மன்னித்து விடுவார்கள்.ஆனால் திருப்பி கொடுக்க முடிவெடுத்துவிட்டால், அவர்கள் மீது எந்த இரக்கத்தையும் காட்ட மாட்டார்கள்.
மிதுனம்
புதனால் ஆளப்படும் மிதுன ராசிக்காரர்கள் இரட்டை இயல்புக்கு பெயர் பெற்றவர்கள். இவர்களின் உண்டையான குணம் எது என்பது பெரும்பாலாக நேரங்களில் வெளிப்படுவதே கிடையாது.
அவர்களை புரிந்து கொள்வது பெரும் சவாலான விடயமாக இருக்கும். இவர்களின் அன்பு எப்படி எல்லையற்றதாக இருக்குமோ, இவர்களின் துன்புறுத்தலும் அப்படிதான் இருக்கும்.
அவர்களின் இரட்டை முகம் கொண்ட ஆளுமையைக் கண்டறிவது மிகவும் கடினம், ஏனெனில் அவர்கள் மற்றவர்களுடன் சேர்ந்து ஒருவரை மோசமாக கிண்டல் செய்வார்கள். ஆனால் சில நேரங்களில் மற்றவர்களை கிண்டல் செய்பவர்களுக்கு எதிராகவும் நடந்துக்கொள்வார்ள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
