Viral Video: நடனமாடிக் கொண்டிருந்த பெண்... திடீரென மரணித்த அதிர்ச்சி காட்சி
மேடையில் நடனமாடிக் கொண்டிருந்த இளம்பெண் மயங்கி விழுந்து உயிரிழந்த காட்சி வைரலாகி வருகின்றது.
தற்போதைய காலக்கட்டத்தில் நடனமாடிக் கொண்டிருக்கும் போதே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் நிலை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
மத்திய பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்தில் 23 வயது பெண் ஒருவர் திருமண நிகழ்வில், ஹிந்தி பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருந்தார்.
மகிழ்ச்சியாக ஆடிக்கொண்டிருந்த அவர் திடீரென சரிந்து கீழே விழுந்துள்ளார். இப்பெண் மத்திய பிரதேசத்தை சேர்ந்த பரினிதா ஜெயின் என்பவர் என்றும், உறவினர் திருமணத்தில் கலந்து கொண்டு நடனமாடும் போது இவ்வாறு நடந்தேறியதும் தெரியவந்துள்ளது.
MP : विदिशा में बहन की शादी में स्टेज पर डांस करते वक्त युवती की अचानक मौत हो गई !! pic.twitter.com/dcjKgsdxej
— Sachin Gupta (@SachinGuptaUP) February 9, 2025