23 வயது இளைஞனுக்கு 60 வயது பாட்டியுடன் காதல்! கேவலமாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்
அமெரிக்காவை சேர்ந்த 23 வயது இளைஞன் 60 வயது பெண்ணுடன் காதல் வயப்பட ஒன்றாக குடும்பம் நடத்தி வருகின்றனர்.
Quran என்ற அந்த இளைஞன், Cheryl என்ற பெண்ணுடன் அடிக்கடி டிக்டாக் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இருவரும் சேர்ந்து நடனமாடுவது, முத்தமிட்டுக்கொள்வது போன்ற வீடியோக்கள் மூலம் தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர்.
இதைப்பார்த்த நெட்டிசன்கள், அவர் உங்களது பாட்டி போன்று இருக்கிறார் என மோசமாக விமர்சித்துள்ளனர்.
இதற்கு பதிலடியாக, Cheryl-யின் பிள்ளைகளுக்கு தங்களது உறவால் சந்தோஷமே என்றும், காதலுக்கு வயது ஒரு தடையில்லை எனவும் கூலாக பதிலளித்துள்ளனர்.
இந்நிலையில் Cheryl பணக்கார பெண் என்பதால், குறித்த இளைஞர் காதலிப்பது போன்று நடிக்கலாம் எனவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனால் இது எதையுமே காதில் வாங்கிக்கொள்ளாத ஜோடி, நாங்கள் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொள்கிறோம், எதிர்ப்பவர்களை பற்றி எங்களுக்கு கவலையில்லை என தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே, நெட்டிசன்களில் பலரும் இந்த ஜோடிக்கு ஆதரவாகவும் கமெண்டுகளை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.