உலகிலேயே மிக குள்ளமான பசு.. காண திரண்டு வரும் மக்கள்; வைரல் புகைப்படம்!
பசு ஒன்று மிககுள்ளமாக இருந்து கின்ன்ஸ் சாதனையில் இடம்பிடித்த புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வங்காள தேச தலைநகர் டாக்காவுக்கு அருகே உள்ள இடம் சாரிகிராம். இங்கு அருகே உள்ள ஷிகோர் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு, சொந்தமாக பண்ணையில் உள்ள அந்த பசுமாடுதான் டாக்காவில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது.
அந்த பசுமாட்டுக் பெயர் ராணி, இந்த பசு 51 சென்டிமீட்டர் நீளம் உடையது.. 57 பவுண்டுகள் அதாவது 26 கிலோகிராம் மட்டுமே எடை இருக்கிறது.
மேலும், இந்த பசுதான் உலகிலேயே மிக குள்ளமான பசுவாம்,. இதற்கு முன்பு கின்னஸ் சாதனையில் மிக குள்ளமான பசு இடம்பெற்றிருந்தது.
கேரளாவை சேர்ந்த மாணிக்யம் என்பவரின் பசு அது, கடந்த 2014-ல் முதல் இந்த பசுதான் கின்னஸில் முதலிடத்தில் உள்ளது. அதன் உயரம் 61 செமீ ஆகும். ஆனால், அந்த பசுவை விட தற்போது ராணி 10 சென்டிமீட்டர் குறைவாம்..

அதனால், ராணிதான் இப்போதைக்கு கின்னஸ் சாதனையில் இடம்பெற உள்ளதாக கூறகிறார்கள். மேலும், சமூக வலைத்தளங்களில் ராணி போட்டோதான் வைரலாகி கொண்டிருக்கிறது..
இந்த விஷயத்தை கேள்விப்பட்ட டாக்கா மக்கள், கொரோனா லாக்டவுன் அமலில் உள்ளது என்பதை கூட மறந்து வேடிக்க பார்க்க திரண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இறுதியில் இந்த விஷயம், சுகாதாரத்துறையினருக்கு தெரியவந்ததையடுத்து, யாரையும் பண்ணையில் சேர்க்காதீங்க என்று பண்ணை ஓனர் ஷிகோருக்கு அறிவுறுத்தி உள்ளனராம்.
இதில் என்ன ஒரு சிறப்பு என்னவென்றால், இப்போது லாக்டவுன் என்பதால் போக்குவரத்து எதுவும் இல்லை. ஆனாலும், டாக்காவிலிருந்து தென்மேற்கே 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த பண்ணைக்கு மக்கள் ரிக்ஷாவை பிடித்து வந்து கொண்டு பார்க்கிறார்களாம்.....