பராபவ ஆண்டு பொதுப்பலன்கள்: தங்கத்தை தோற்கடிக்கப்போகும் வெள்ளி விலை!
2026 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மக்கள் மத்தியில் ராசி பலன் பற்றி அறிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்து வருகின்றது.
2026 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு சித்திரை 1 (ஏப்ரல் 14, 2026) திங்கட்கிழமை அதிகாலை 2.29 மணிக்கு பிறக்கிறது.

பிறக்கின்ற தமிழ் புத்தாண்டு, ஜோதிட ரீதியில் பராபவ ஆண்டு என குறிப்பிடப்படுகின்றது. இந்த பராபவ ஆண்டு செல்வ செழிப்பை கொடுக்க கூடிய சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப லக்கினத்தில், கும்ப ராசியில் பிறப்பதால் பொருளாதார ரீதியில் பெரிய ஏற்றத்தை கொடுக்கும்.
மேலும், இந்த ஆண்டு குரு, சனி, ராகு, கேது ஆகிய நான்கு முக்கிய கிரகங்கள் அதன் சொந்த மற்றும் சுப நட்சத்திரத்திலேயே பயணிப்பது மிகவும் மங்களகரமான விடயமாக பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில், 2026 ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு பொது ராசிப்பலன் கணிப்புகளின் பிரகாரம் புத்தாண்டில் நிகழப்போகும் பொதுவான மாற்றங்கள் குறித்து விரிவாக இந்த காணொளியில் காணலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |