2026 இன் முதல் சூரிய கிரகணம் நிகழப்போகும் நேரம்? இந்த ராசியினர் ஜாக்கிரதை!
2026 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் எதிர்வரும் 17 ஆம் திகதி நிகழவுள்ளது. ஜோதிட கண்ணோட்டத்தில் கிரகண நிகழ்வு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
மறுபுறம், அறிவியல் பார்வையில், கிரகண நிகழ்வு ஒரு வானியல் நிகழ்வாகக் கருதப்படுகிறது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் செல்லும் போது சூரிய கிரகணம் தோற்றுகின்றது.இந்த கிரகணம் ஒரு வளைய சூரிய கிரகணம் என குறிப்பிடப்படுகின்றது.

இந்த கிரகணத்தில் சூரியனின் மையப் பகுதி மட்டும் நிழல் பகுதியில் வரும் வகையில் சந்திரன் சூரியனை மறைக்கிறது. அத்தகைய சூழ்நிலையில் சூரியன் ஒரு வளையல் போல் தோன்றுகிறது.இது ரிங் ஆஃப் ஃபயர் என்று குறிப்பிடப்படுகின்றது.
ஆண்டின் முதல் சூரிய கிரகணம்
அந்த வகையில் 2026ஆம் ஆண்டில் நிகழும் முதல் சூரிய கிரகணம் 17 பிப்ரவரி 2026 அன்று நடைபெறும்.
இது தென்னாப்பிரிக்கா, தெற்கு அர்ஜென்டினா மற்றும் அண்டார்டிகாவில் தெரியும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த கிரகணம் இந்தியாவில் தெரியாது என்பதால் இதனால் எவ்விதமான ஆபத்தும் இருக்காது.
இந்திய நேரப்படி பிப்ரவரி 17 ஆம் திகதி பிற்பகல் 3.27 மணிக்கு ஆரம்பமாகி காலை 07.58 மணிக்கு முடிவடையும்.

ஜோதிட கணிப்பின் பிரகாரம் மேஷம், சிம்மம் மற்றும் கும்ப ராசியினர் இந்த நேரத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஜோதிட நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |