மனித இனத்திற்கு ஆபத்து - பகீர் கிளப்பிய பாபா வங்கா... 2026 நவம்பர் நடக்கபோவது என்ன?
உலகில் பல தீர்க்கதரிசிகள் இருந்தாலும், அவர்களில் பெரும் புகழ்பெற்றவர் பாபா வாங்கா. பல்கேரியாவைச் சேர்ந்த இவர், தனது அதிசயமான கணிப்புகளால் உலகளவில் பெயர் பெற்றுள்ளார்.
பாபா வங்கா, 12வது வயதில் பார்வை இழந்ததற்குப் பிறகு, எதிர்காலத்தைப் பார்க்கும் ஒரு வலிமையான சக்தி அவருக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதன் பின் அவரால் கணிக்கபட்ட பல விடயங்கள் அதுவும் 100 வருடங்களுக்கு முன்பு கணித்த விடயங்கள் தற்போது இந்த நூற்றாண்டில் நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் பாபா வாங்கா 2026 ஆண்டில் என்னெல்லாம் நடக்கும் அவற்றை நாம் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை கணித்துள்ளார்.

கணிப்புகள்
2026-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், பூமிக்கு வெளியே இருக்கும் உயிரினங்களுடன் மனிதர்கள் முதல் முறையாகத் தொடர்புகொள்வார்கள் என்று பாபா வங்கா கணித்துள்ளார் என சொல்லப்படுகின்றது.
இது தவிர ஒரு பெரிய விண்கலம் பூமிக்குள் வருமாம். மனித வரலாற்றில் முதல் முறையாக, வேற்றுகிரகவாசிகளுடன் நேரடி தொடர்பு சாத்தியமாகும் என அவர் மிகவும் துல்லியமாக கணித்துள்ளார்.

உண்மையில் இது எலகை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒரு கணிப்பாக இருக்கிறது. 2026ஆம் ஆண்டுக்குள் தங்கத்தின் விலை 25 முதல் 40 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று இந்த மதிப்பீடுகள் கூறுகின்றன. தங்கம் விலை அதிகரித்தால் பொருளாதாரம் பாதிக்கப்படும்.
2026 ஆம் ஆண்டில் AI தொழில்நுட்பம் மேலும் உச்சத்திற்கு செல்லும். ஆனால் அது மனித வாழ்க்கைக்கு ஒரு பெரிய சவாலாக மாறக்கூடும் என பாபா வாங்கா எச்சரித்துள்ளார்.
தொழில்நுட்பம் மனித வாழ்க்கையில் ஆழமாக ஊடுருவும் எனபதும் ஒரு கணிப்பாக உள்ளது. எதிர்காலத்தில் மனிதர்கள் மிகவும் சிறியதாயினும், மிக சக்திவாய்ந்த ஒரு மின்னணு சாதனத்தை முழுமையாகச் சார்ந்து வாழ்வார்கள்.

அந்தச் சாதனம் மனிதர்களின் தினசரி வாழ்க்கை, பழக்கவழக்கங்கள் மட்டுமல்ல, ஒருவருடன் ஒருவர் பழகும் முறையையும், அவர்களின் மனநிலையையும் மாற்றும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். அந்தக் காலத்தில் அவரது இந்தக் கணிப்பு பலருக்கும் நம்ப முடியாததாக இருந்தது.
ஆனால், இன்றைய காலத்தில் நாம் அனைவரும் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள் அந்தக் கணிப்பை உண்மையாகவே மாற்றியுள்ளதாக பலர் கருதுகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |