ஆட்டிப்படைத்த ஏழரை சனி ஜென்ம குருவால் அடங்கி போனார்... எச்சரிக்கை!
குருவின் பார்வையால் யோகம் அடையக்கூடிய ராசிகளில் கும்ப ராசியும் ஒன்று.
ஏழரை சனி நடப்பதால் ஏற்படக்கூடிய கவலைகள், கஷ்டங்களுக்கு ஆறுதலைத் தரக்கூடியதாக இந்த குரு அமைப்பு இருக்கும்.
5ம் இடத்தை குரு பார்ப்பதால், பூர்விக இடங்களில் சென்று வசிக்க நினைப்பவர்களுக்கு வாய்ப்பு ஏற்படும்.
சொத்து சார்ந்த விஷயங்கள் கை கூடும். பிரிந்திருந்த, விலகி இருந்த உறவினர்கள் உங்களுடன் சேர்வார்கள்.

ஆன்மிக யாத்திரை செல்ல திட்டமிட்டுள்ளவர்களுக்கு அந்த பாக்கியம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி சிறப்பாக இருக்கும். உயர் கல்விக்கான முயற்சிகள் வெற்றி அடையும்.
இதுவரை இருந்த சொத்து தொடர்பான வில்லங்கங்கள் நீங்கும். குருவின் பார்வையால் உங்களுக்குரிய பாக்கியம், யோகத்தை அனுபவிக்க எந்த ஒரு தடையோ அல்லது பிரச்சினையோ இருக்காது.
விரய சனியின் தக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் கும்ப ராசியினருக்கு இந்த குரு பெயர்ச்சியால் ஆறுதல் தருவதாகவும், அதைத் தாண்டி அதிர்ஷ்டம் தருவதாகவும் இருக்கும்.
அதிர்ஷ்ட பலன்கள் அதிகம் பெறும் மற்ற ராசிகளை விட கும்ப ராசி சற்று குறைவான அதிர்ஷ்டங்கள் பெறும்.