2013ம் ஆண்டிலேயே கொரோனா வருவதை எச்சரித்த நபர்.... 2016ல் காணாமல் போனது ஏன்? வைரலாகும் டுவிட்
கொரோனா வைரஸ் வருகிறது என்று 2013ம் ஆண்டிலேயே ஒருவர் டிவீட் போட்டுள்ளதாக புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது. இதுதொடர்பான டிவீட்டும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சீனாவின் வூஹான் மாகாணத்தில் தொடங்கி இன்று இந்தியா வரை வந்து விட்ட தற்போது இரண்டாவது அலையில் மக்களை பெரும் பாதிப்பிற்குள் உள்ளாக்கி வருகின்றது.
உலக சுகாதார அமைப்பு, உலகின் மிகப் பெரிய கொடிய நோயாக கொரோனாவை வகைப்படுத்தி அறிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் தற்போது கொரோனாவிடம் சிக்கித் தவிக்கின்றன. குறிப்பாக இத்தாலி, பிரான்ஸ் நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது கொரோனா.
கொரோனா வைரஸ் செயற்கையாக சீனாவில் உருவாக்கப்பட்டது என்று பலரும் கூறி வரும் நிலையில், இந்நோய் ஒட்டுமொத்த உலகத்தையும் வாட்டி வதைத்து வருகின்றது. குறிப்பாக கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவையே பயங்கரமாக புரட்டி வருகின்றது.
இந்நிலையில் 2013ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி மார்கோ அகோர்டஸ் என்பவர் ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில் "Corona virus....its coming" என்று குறிப்பிட்டுள்ளார். இதுதான் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று பரவியுள்ள கொரோனா வைரஸ் குறித்து இவருக்கு எப்படி 2013ம் ஆண்டே தெரியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பலரும் இந்த டிவீட்டில் வந்து கமெண்ட்டுகளைக் குவித்து வருகின்றனர். இப்போது ஆட்டிப் படைத்து வரும் கொரோனா குறித்து 2013ம் ஆண்டே இவர் கூறியது எப்படி என்றுதான் பலரும் ஆச்சரியத்துடன் கேட்டு வருகின்றனர். இந்த நபர் 2016ம் ஆண்டுடன் டிவீட் போடுவதை நிறுத்தி விட்டார். சிலருக்கு இவர் போட்ட டிவீட் நிஜம்தானா என்ற சந்தேகமும் உள்ளது.
டிவிட்டரை ஹேக் செய்து தேதியை மாத்திட்டீங்களா என்றும் சிலர் கேள்வி கேட்டுள்ளனர். காரணம், இந்த டிவீட்டை யாராலும் நம்ப முடியவில்லை. 2016ம் ஆண்டுடன் டிவீட் போடுவதை நிறுத்தியுள்ளதைப் பார்க்கும்போது இவரை யாரோ சிலர் சைலன்ஸ் ஆக்கி விட்டதாகவே தெரிகிறது என்று ஒருவர் கூறியுள்ளார். பல உண்மைகளை இவர் வெளியில் சொல்லி விடுவார் என பயந்து இதைச் செய்திருக்கலாம் என்பது இவர்களது கருத்து. இந்த டிவீட் எந்த வகையில் உண்மையானது என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.
கடந்த சில மாதத்திற்கு முன்பு இந்த தகவல் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகமாகியிருப்பதால் இந்த டுவிட் மீண்டும் வைரலாகி வருகின்றது.
Corona Virus...its coming - the man the myth the legend https://t.co/xyXldynZQn
— Soham Gaming (@SohamGaming) May 9, 2021