2027-ல் தங்கத்தின் விலை புதிய உச்சத்தைத் தொடுமா? பாபா வங்காவின் கணிப்பு!
எதிர்காலத்தைக் கணிக்கும் தீர்க்கதரிசிகளில் உலகப் புகழ்பெற்ற பாபா வங்கா முக்கியமானவராகக் கருதப்படுகிறார். உலக வரலாற்றில் நிகழ்ந்த பல முக்கிய சம்பவங்களை அவர் முன்கூட்டியே கணித்ததாகக் கூறப்படுகிறது.
பாபா வங்கா
1911 அக்டோபர் 3ஆம் தேதி பிறந்த இவர், சிறுவயதில் ஏற்பட்ட விபத்தால் பார்வையை இழந்த பின்னர் எதிர்காலத்தைக் கணிக்கும் ஆற்றலைப் பெற்றதாக நம்பப்படுகிறது.

இவரது கணிப்புகள் 85 சதவீதம் பலித்துள்ளதாகக் கூறப்படுவதால், ஒவ்வொரு ஆண்டும் அவரது கணிப்புகள் வைரலாகி வருகின்றன.
அந்தவகையில், 2026ஆம் ஆண்டு இறுதியை நெருங்கும் நிலையில், 2027ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் பெயருடன் தொடர்புடைய கணிப்புகள் மீண்டும் கவனம் பெற்றுள்ளன.
இந்நிலையில், 2027ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை மேலும் உயரக்கூடும் என்ற பாபா வங்காவின் பெயரில் பரவும் கணிப்புகள் இணையத்தில் கவனம் பெற்று வருகின்றன.

2027-ல் தங்கத்தின் விலை என்ன?
2026ஆம் ஆண்டு தொடக்கம் முதல் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் ஒரு பவுன் தங்கம் ரூ.1.20 லட்சம் வரை விற்பனையான நிலையில், விலை உயர்வு முதலீட்டாளர்களுக்கு சாதகமாக இருந்தாலும், நகை வாங்கும் பொதுமக்களுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது.
உலகளாவிய பொருளாதார நெருக்கடி, அமெரிக்க டாலரின் பலவீனம், நிதிச் சந்தை ஏற்ற இறக்கங்கள் மற்றும் புவிசார் அரசியல் மாற்றங்கள் ஆகியவை தங்கத்தின் விலையை உயர்த்தக்கூடும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.

இணையத்தில் பரவும் தகவல்களின்படி, 2027ஆம் ஆண்டில் இந்தியாவில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.2.62 லட்சம் முதல் ரூ.2.82 லட்சம் வரை உயரக்கூடும் எனக் கூறப்படுகிறது.
மேலும், சில பொருளாதாரக் கணிப்புகள் தங்கத்தின் விலை 25 முதல் 40 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கின்றன.

UBS, JPMorgan, Deutsche Bank உள்ளிட்ட சர்வதேச நிதி நிறுவனங்களின் ஆய்வாளர்களும் தங்கத்தின் விலை தொடர்பான உயர்வுக் கணிப்புகளை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் பாபா வங்காவின் தங்கம் பற்றிய கணிப்புகளும் இணையத்தில் பெரிதும் கவனம் ஈர்த்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |