சிரித்து பேசியவாறு சரிந்து விழுந்த மாணவி... பதைபதைக்க வைக்கும் காட்சி
கல்லூரி மாணவி ஒருவர் மேடையில் பேசிக் கொண்டிருந்த நிலையில், மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த கல்லூரி மாணவி:
இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் பிரபல கல்லூரி ஒன்றில் நடைபெற்ற Farewell விழாவின் போது மேடையில் மாரத்தி மொழியில் பேசிக் கொண்டிருந்த மாணவி கீழே சரிந்துள்ளார்.
குறித்த காட்சியில் இவரது பேச்சைக்கேட்ட மாணவிகளும், அருகிலிருந்த ஆசிரியர்களும் சிரிக்கின்றனர். அந்த மாணவியும் சிரித்துக்கொண்டே தனது பேச்சை தொடர்கிறார். பாதியிலேயே அவரது பேச்சில் தடுமாற்றம் ஏற்படவே, திடீரென கீழே சரிந்துள்ளார்.
விழுந்த இந்த மாணவிக்கு உதவி செய்வதற்காக அருகில் இருந்த அனைவரும் ஓடி வருவது வரை, இது குறித்து வைரலாகும் வீடியோவில் காட்சிகளாக பதிவாகியிருக்கிறது.
விசாரணையில் குறித்த மாணவிக்கு 8 வயதில் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்த நிலையில், பின்பு 12 ஆண்டுகளாக நலமுடன் இருந்ததாக கூறப்படுகின்றது.
மேடையில் பேசும் போது பதற்றம் அதிகரித்து, மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகின்றது. குறித்த மாணவியை சோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்..
காணொளியை இங்கே அழுத்திப் பார்க்கவும்...