நான் 2 குழந்தைகளுக்கு தந்தை.. என் நாட்டில் அது நடக்காது? மனம் உருக்கிய உக்ரைன் அதிபர்!
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போரை நடத்தி வரும் நிலையில், போரை நிறுத்த கூறி உலக நாடுகள் கண்டனத்தை எழுப்பி வருகின்றனர். இந்த போரால் இருதரப்பிலும் சேதங்கள், உயிர் பலிகள் ஏற்பட்டுள்ளன.
இந்தப் போரில் இதுவரை 2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை ரஷ்ய துருப்புகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதுவரை 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டு தாய்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டிருக்கின்றனர்.
போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யா - உக்ரைன் இடையே இதுவரை நடைபெற்ற மூன்றுகட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளன. ஆனால் போர் முடிவுக்கு வரலாம் என ரஷ்ய அதிபர் புதின் தற்போது தெரிவித்து இருக்கிறார்.

இந்த நிலையில், உக்ரைன் மீதான போரில் ரஷ்யா ரசாயன ஆயுதங்களை பயன்படுத்த வாய்ப்பு உள்ளதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. ஆனால் உக்ரைன் தான் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக ரஷியா தெரிவித்தது.
இதனை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக மறுத்துள்ளார். அவர் உக்ரைனில் ரசாயன ஆயுதங்கள் அல்லது பேரழிவு ஆயுதங்கள் எதுவும் உருவாக்கப்படவில்லை. ரஷ்யாவின் திட்டங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் ரஷ்யா மற்றவர்கள் மீது குற்றம் சாட்டுவதை பார்த்தாலே போதும் என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும், இதற்கு பதலளிக்கும் விதமாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், அமைதியான ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்படுகிறது. இன்னும் வேறு என்னெல்லாம் தயார் செய்துள்ளீர்கள்? ரசாயன ஆயுதங்களால் எங்கு தாக்குகிறார்கள்? என்று கூறுங்கள் என்று கேள்விகளை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எழுப்பியுள்ளார்.
பின்னர் நான் ஒரு நாட்டின் தலைவர்.. அதுமட்டுமின்றி இரண்டு குழந்தைகளுக்கு தந்தை எனக்கூறி தங்கள் நிலத்தில் இரசாயன ஆயுதங்கள் தயாரிக்கபடவில்லை என்று தெரிவித்துள்ளார்.