சிறுமியின் வயிற்றுக்குள் இருந்த அந்த ஒரு பொருள்! பேரதிர்ச்சியில் மருத்துவர்கள்
ஆந்திராவை சேர்ந்த சிறுமியின் வயிற்றுக்குள் இருந்த சுமார் 1 கிலோ முடியை மறுத்தவர்கள் அகற்றியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைமுடி சாப்பிடும் பழக்கம்
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ளது குடிவாடா என்ற பகுதியில் இங்கு 12 வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்தோடு வசித்து வந்தார்.
அந்த சிறுமி தனது சிறுவயதில் இருந்தே இதனை சாப்பிட பழகியுள்ளார். இதனால் அவரது வயிற்றில் குவிந்து செரிமான மண்டலத்தில் ஒரு பெரிய கட்டியாக உருவாகியுள்ளது.
செரிமான மண்டலத்தை நிரப்பி அவர் சாப்பிட்ட சாப்பாடு எதுவும் அவருக்கு செரிக்காமல் இருந்துள்ளது. அதோடு அவருக்கு கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவும் ஏற்பட்டுள்ளது.
வயிறு வலி, வாந்தி, உடல் எடை, சாப்பாட்டின்மை போன்ற குறைபாடுகள் இருந்துள்ளது. இதனால் அவரது குடும்பம் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பரிசோதனை
இதனால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் இருந்துள்ளது.
அப்போது அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தில் அவரது வயிற்றில் கருப்பாக எதோ கட்டி போல் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அறுவை சிகிச்சை
இதன் பின் அவருக்கு நேற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது கட்டி தான் என்று எண்ணிய மருத்துவர்களுக்கு பெரிய அதிர்ச்சி அளிக்கும் விதமாக அவரது வயிற்றுக்குள் முடி இருந்தது தெரியவந்தது.
பின்னர் சிறுமியின் வயிற்றுக்குள் இருந்த அதனை முடிகளை அகற்றினர்.
இது சுமார் 1 கிலோ வரை அந்த முடியின் எடை இருந்துள்ளது.
இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், சிறுமிக்கு ‘டிரைக்கோபெசோர்’ என்று அழைக்கப்படும் தலைமுடி சாப்பிடும் பழக்கம் இருந்துள்ளதாக கூறினார்.
சிகிச்சைக்கு பிறகு தற்போது சிறுமி நலமுடன் இருக்கிறார். அவரது வயிற்றில் இருந்த முடிகள் முழுவதுமாக அகற்றப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.