15 ஆயிரம் பெண்களா? இடது கையை தூக்க முடியாமல் தூக்கிய இளைஞர்
15,000க்கும் மேற்பட்ட பெண்கள் சேர்ந்து இளைஞர் ஒருவரின் இடது கையில் ராக்கிய கட்டியதாக புகைப்படங்களுடன் செய்தி வெளியாகியுள்ளது.
ரக்ஷா பந்தன் கொண்டாட்டம்
பாட்னாவைச் சேர்ந்த பிரபல ஆன்லைன் பயிற்சியாளர் கான் சர் என்பவர் இருந்து வருகிறார்.
அவர், தன்னுடைய மாணவர்களுடன் 2025 ஆம் ஆண்டு ரக்ஷா பந்தன் கொண்டாட்டத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளார் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ பகிர்ந்துள்ளார்.
அதில், தன்னிடம் பயிலும் மாணவர்களுக்கும் தனக்கும் இடையிலான வலுவான பிணைப்பால் அவரது இடது கையில் ராக்கி கட்டி அவர்களின் அன்பை வெளிப்படுயிருக்கிறார்கள் என கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், தன்னிடம் பயிலும் மாணவர்களை சகோதரிகளாக கருதுகிறேன். அவர்களுடைய பாசத்தை காட்டுவதற்கு அளவே இல்லை. அவர்களின் இந்த செயல் இரத்த உறவுகளுக்கு அப்பாற்பட்ட வழிகாட்டுதல் மற்றும் தோழமையின் உண்மையான உணர்வு..” என்றும் பேசியிருக்கிறார்.
கையை தூக்க முடியாமல் இருந்த இளைஞர்
இந்த நிலையில், அவருடைய இடது கையில் உள்ள மணிக்கட்டில் க 15,000 க்கும் அதிகமாக ராக்கிகள் கட்டப்பட்டுள்ளன. இதனால் அவருடைய கை மிகவும் கனமாக மாறியுள்ளது.
இந்த காணொளி இன்ஸ்டாகிராமில் 24 மணி நேரத்திற்குள் 8 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது.
இந்து பண்டிகைகளில் உடன்பிறப்புகளுக்கு இடையிலான அன்பு, பொறுப்பு மற்றும் மரியாதை ஆகியவற்றை வெளிகாட்டுவதற்காக கொண்டாடப்படும் தினமாக இது பார்க்கப்படுகிறது.
2025 ஆம் ஆண்டில், ரக்ஷா பந்தன் ஆகஸ்ட் 9 சனிக்கிழமை கொண்டாடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |