Naphthalene Balls: இனி போடாதீங்க.. ஆபத்தை விலைக்கு வாங்கச் செய்யும் நாப்தலீன் உருண்டை
பொதுவாக வீடுகளில் பூச்சிகள் வராமல் இருப்பதற்காக நாப்தலீன் உருண்டுகளை வாங்கி பயன்படுத்துவோம்.
இது ப்ரோ போன்று ஆடைகள் மற்றும் புத்தகங்கள் உள்ள இடங்களில் அதிகமாக பயன்படுத்துவதை பார்க்கலாம்.
இது முகர்ந்து பார்ப்பதற்கு அவ்வளவு வாசணையாக இருக்கும். அத்துடன் கரப்பான் பூச்சி வருவதை தடுக்கவும், துணியில் நறுமண வீசவும் இந்த உருண்டை பயன்படுத்தப்படுகிறது.
ஆனால் சிறிய உருண்டைகளாக இருந்தாலும், அதனால் நமக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைத்தாலும் அதிலுள்ள சில கெமிக்கல்கள் மனிதர்களுக்கு ஆபத்துக்களை ஏற்படுத்துகிறது என கண்டறியப்பட்டுள்ளது.
அந்த வகையில், நாப்தலீன் உருண்டைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் என்னென்ன என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.
நாப்தலீன் (Naphthalene)
வழக்கமாக வீடுகளில் நாம் பயன்படுத்தும் நாப்தலீன் (Naphthalene) உருண்டைகளில் கெமிக்கல் உள்ளது. இது காற்றில் கலந்து வாயுவாக மாறும். அந்த வாயு கண்ணுக்கு தெரியாத பூச்சிகளை கொள்கிறது. ஆனால் அந்த வாயு சுவாசிக்கும் பொழுது கொஞ்சம் கொஞ்சமாக உடலுக்குள் சென்று அங்கு பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. இந்த வாயு விஷத்தன்மை வாய்ந்தவை.
இவ்வளவு தீமைகள் இருக்கா?
1. நாப்தலீன் உருண்டைகள் உள்ள இடத்தில் நாம் சிறிது நேரம் இருந்தால் மூச்சுத் திணறல், இருமல், தலைசுற்றல், தலைவலி, ஆஸ்துமா, வாந்தி போன்ற பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
2. சிலர் வீடுகளில் குழந்தைகளின் ஆடைகளுக்கு நடுவில் பயன்படுத்துவார்கள். அது குழந்தைகளுக்கு ரத்த சோகை நோயை ஏற்படுத்துட். அதே சமயம், புற்று நோய் வருவதற்கும் வாய்ப்பாக அமையும்.
3. கர்ப்பிணி பெண்கள் நாப்தலீன் வாயுவை அதிகமாக சுவாசிக்கும் பொழுது வயிற்றில் இருக்கும் குழந்தையை இது பாதிக்க வாய்ப்பு உள்ளது. அத்துடன் நிறுத்தாமல் மரபணு பிரச்சனை, கருசிதைவு, அறிவுத் திறன் குறைபாடு போன்ற பிரச்சனைகளும் வரலாம்.
4. ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் அளவு குறைந்து ஆக்ஸிஜன் பற்றாக்குறையும் வரலாம். இதனால் சிறுநீரகம், கல்லீரல் போன்ற உடல் உறுப்புகளில் பாதிப்புக்களும் வரலாம்.
5. நாப்தலீன் உருண்டையின் வாசனையை நுகரும் பழக்கம் நம்மிள் பலருக்கும் உள்ளது. இதனை அதிகமாக நுகர்ந்தால் ரத்த சொறிவு பாதிப்பு ஏற்படும்.
6. நாப்தலீன் வாயு மூச்சு பாதை பாதிக்கப்படுவது போன்று கண்ணில் பட்டால் கண் எரிச்சல் மற்றும் கண் சிவப்பாக மாறும். சருமத்தில் பட்டால் அரிப்பு, எரிச்சல் வரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
7. குழந்தைகள் நாப்தலீன் உருண்டைகளை விழுங்கினால் வாந்தி, பேதி, வயிற்று வலி வரும். ஏனெனின் அந்த உருண்டையில் உள்ள கெமிக்கல் உடல் முழுவதும் பரவி தீவிரமான உடல் நல பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
8. குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அதிகமாக பாதிக்கப்படுவதால் சில நாடுகளில் இந்த உருண்டையை தடை செய்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |