150 வருடம் பழமையான பாலம்! பார்த்தாலே திகிலூட்டும்
நீரினை கடப்பதற்காக கட்டப்படுவதே பாலம். அதன்படி உலகின் சில பாலங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துபவையாக இருக்கின்றன.
இந்தியாவில், உத்தகரகாண்டில் உள்ள கர்டாங் கலி என்ற பாலம் தான் அது. இது கடல் மட்டத்திலிருந்து 11,000 அடி உயரத்திலுள்ள கங்கோத்ரி தேசியப் பூங்காவுக்குள் பாய்ந்து கொண்டிருக்கும் ஜத் கங்கை நதியின் மீதுதான் இந்தப் பாலம் அமைந்துள்ளது.
150 வருடங்களுக்கு முன்பு இந்தியாவுக்கும் திபெத்துக்கும் இடையே ஒரு வர்த்தக பாதையாக இது அமைக்கப்பட்டதாம்.
இந்தப் பாலமானது சிறிது காலம் பயன்படுத்தாமல் மூடப்பட்டிருந்ததாம். இந்தப் பாலமானது, 59 வருடங்களுக்குப் பின்னர் 2021இல் 135 மீட்டர் நீளமும் 1.8 மீட்டர் அகலமும் கொண்ட படிக்கட்டுகள் வனத்துறை அதிகாரிகளால் கட்டப்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக பாலம் திறக்கப்பட்டது.
பார்வையாளர்களின் பாதுகாப்புக் கருதி ஒரே நேரத்தில் 10 பேர் மாத்திரமே நடக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
அவர்கள் ஏறும்போதும் ஒருவருக்கொருவர் ஒரு மீட்டர் தூரத்தை கடைபிடிக்க வேண்டும் என்ற விதி உள்ளதாம்.