பிறந்து 13 நாட்களில் பாஸ்போர்ட் பெற்ற குழந்தை – சர்வதேச சாதனை
ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம் இச்சாபுரத்தைச் சேர்ந்த ஆஷிஷ் மற்றும் ராஜமகேந்திரவரத்தைச் சேர்ந்த கீதாமாதுரி தம்பதி, வேலை நிமித்தமாக லண்டனில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த மே 30ஆம் தேதி ராஜமகேந்திரவரத்தில் பெண் குழந்தை பிறந்தது.
லண்டனுக்குப் பயணம் செய்வதற்காக, பிறந்து இரு நாட்களிலேயே (ஜூன் 1) குழந்தைக்கு ‘அகஸ்யா பிரின்ஸ்’ எனப் பெயரிட்டு பிறப்புச் சான்றிதழ் பெறப்பட்டது.

வெறும் 13 நாட்களிலேயே பாஸ்போர்ட்
தொடர்ந்து ஜூன் 2ஆம் தேதி ஆதார் அட்டைக்கும், ஜூன் 6ஆம் தேதி பாஸ்போர்ட்டுக்கும் விண்ணப்பிக்கப்பட்டது. குழந்தையின் ஆதார் அட்டைக்கு ஜூன் 4ஆம் தேதியும், பாஸ்போர்ட்டுக்கு ஜூன் 12ஆம் தேதியும் ஒப்புதல் கிடைத்தது.
இதன் மூலம் பிறந்து வெறும் 13 நாட்களிலேயே பாஸ்போர்ட் பெற்ற அகஸ்யா பிரின்ஸ், சர்வதேச சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
இதற்கு முன்பு 19 நாள் குழந்தை ஒருவர் மிகக் குறைந்த வயதில் பாஸ்போர்ட் பெற்ற சாதனையைப் படைத்திருந்த நிலையில், அகஸ்யா பிரின்ஸ் அந்தச் சாதனையை முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |