12 டன் KitKat சாக்லேட் லாரியோடு மாயம்! நடந்தது என்ன?
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட பெரும் தொகை சாக்லேட்டுகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஐரோப்பாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சாக்லேட்டுகள், பார்முலா ஒன் (F1) கார் பந்தயத்தை மையமாகக் கொண்டு, கார் வடிவத்தில் வடிவமைக்கப்பட்ட புதிய தயாரிப்புகள் என குறிப்பிடப்படுகின்றது.

ஆனால், மத்திய இத்தாலியில் உள்ள தொழிற்சாலையில் இருந்து கடந்த மார்ச் 26ஆம் திகதி புறப்பட்ட லாரி, போலந்துக்கு செல்லும் வழியிலேயே கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்நிலையில், இந்த திருட்டு குறித்து கிட்கேட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "காணாமல் போன கிட்கேட் சாக்லேட்டுகள் மீதான உங்கள் ஆர்வத்திற்கு நன்றி.

ஆனால் இது ஒரு சாகச செயலோ அல்லது ஏப்ரல் 1 முட்டாள்கள் தினத்துக்கான நகைச்சுவையோ அல்ல, உண்மையிலேயே 12 டன் கிட்கேட் சாக்லேட்டுகள் திருடு போயுள்ளது.
அவை எங்கே சென்றன? என்பதை நாங்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறோம்" என கிட்கேட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |