116 வயதிலும் தளராத பக்தி... 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசித்த மூதாட்டி! வைரலாகும் வீடியோ
116 வயதான மூதாட்டி ஒருவர், திருப்பதி திருமலையில் உள்ள ஸ்ரீ ஏழுமலையான் கோவிலுக்கு அலிபிரி மலைப்பாதை வழியாக 3,550 படிகளை ஏறிச் சென்று சாமி தரிசனம் செய்த சம்பவம் பக்தர்களை ஆச்சரியத்திலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி பலரின் பாராட்டைப் பெற்று வருகிறது.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 116 வயதான நவநீதம்மாள், தனது குடும்பத்தினருடன் திருப்பதி வந்திருந்தார். அப்போது, வாகனத்தில் திருமலைக்கு செல்லாமல், அலிபிரி மலைப்பாதையில் உள்ள 3,550 படிகளையும் நடந்து ஏறி, ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

விஐபி தரிசனம்
அவரது உறுதியான விருப்பத்தை மதித்த குடும்பத்தினரும், அவருடன் முழுப் பாதையையும் படியேறிச் சென்று உறுதுணையாக இருந்தனர். வயது முதிர்ந்த நிலையிலும் அசைக்க முடியாத மன உறுதி மற்றும் ஆழ்ந்த பக்தியுடன் அவர் மலையேறிச் சென்றது அங்கிருந்த பக்தர்களையும் அதிகாரிகளையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
நவநீதம்மாளின் பக்தி மற்றும் மன உறுதியைப் பாராட்டிய திருமலை திருப்பதி தேவஸ்தானம், அவருக்கு சிறப்பு விஐபி தரிசன ஏற்பாடு செய்து கௌரவித்ததுள்ளது.

மேலும், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் பி.ஆர். நாயுடு, தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பதிவின் மூலம் 116 வயதிலும் பக்தியுடன் மலையேறி ஏழுமலையானை தரிசித்த நவநீதம்மாளுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். குறித்த காணொளி தற்போது இணையத்தில் அசுர் வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
ఈ రోజు 116 ఏళ్ల వృద్ధ భక్తురాలు శ్రీమతి నవనీతమ్మ గారికి, ఆమె కుటుంబ సభ్యులతో కలిసి శ్రీవారి ప్రత్యేక విఐపీ బ్రేక్ దర్శనం విజయవంతంగా కల్పించాము.
— B R Naidu (@BollineniRNaidu) July 6, 2026
అనంతరం రంగనాయకుల మండపంలో టీటీడీ ఈఓ శ్రీ ముద్దాడ రవిచంద్ర గారు వేదపండితులతో వేదాశీర్వచనం చేయించి, పట్టువస్త్రం కప్పి, తీర్థప్రసాదాలు… pic.twitter.com/3Cbu2loCVX
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |