வாடிக்கையாளர் ஆர்டர் செய்த உணவு... டெலிவரி செய்ய வந்தவருக்கு கிடைத்த இன்பஅதிர்ச்சி
ஹைதராபாத்தில் தான் ஆர்டர் கொடுத்துள்ள உணவினை வெறும் 20 நிமிடங்களில் சைக்கிளில் வந்து கொடுத்துச் சென்ற ஊழியர் அனைவரின் கவனத்தினை ஈர்த்துள்ளார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த ராபின் முகேஷ் என்ற நபர் கடந்த திங்கள்கிழமை இரவு உணவு டெலிவரி செய்யும் சொமாட்டோ ஆப்பில் உணவு ஆர்டர் செய்துள்ளார்.
குறித்த உணவினை வெறும் 20 நிமிடத்தில் சொமோடோ ஊழியர் கொண்டு வந்து கொடுத்து அசத்தியுள்ளார். அதிலும் இருசக்கர வாகனத்தில் அல்ல சைக்கிளில் வந்து கொடுத்துள்ளார்.
ராபினின் வீட்டிற்கும் உணவு ஆர்டர் செய்த இடத்திற்கும் இடையே இருந்த 9 கி.மீ தொலைவினை வெறும் 20 நிமிடத்தில் சைக்கிளில் சென்றுள்ளார்.
இதுகுறித்து ராபின், டெலிவரி செய்ய வந்த இளைஞரிடம் விசாரித்தபோது, அவரின் பெயர் முகமது அகில் எனவும், தான் ஒரு வருடமாக சொமாட்டோவில் வேலை செய்துக் கொண்டே கல்லூரியில் படித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
இதனைக் கேட்ட ராபின், உடனடியாக தனது மொபைல் கேமரா மூலம் போட்டோ எடுத்து அதனை இணையத்தில் பதிவிட்டுள்ளதோடு, முகமது இப்போது பொறியியல் படித்து வருகிறார். எல்லாமே இந்த சைக்கிளால் தான் சாத்தியமாகிறது. நீங்கள் இவரை பார்க்க நேரிடும் போது தாராளமாக உதவி செய்யுங்கள். நான் டீ ஆர்டர் செய்திருந்தேன். அது மிகவும் சூடாக இருந்தது' எனப் பதிவிட்டுள்ளார்.
ஆதுமட்டுமின்றி அவருக்காக நிதி திரட்டவும் ஆரம்பித்துள்ளார். சுமார் 10 மணி நேரத்தில் 73 ஆயிரம் வரை நிதியுதவி கிடைத்த நிலையில், ராபின் அகிலுக்காக ரூ.65,000 மதிப்புள்ள டிவிஎஸ் XL பைக் புக்கிங் செய்தநிலையில், இரண்டு நாட்களில் பைக்கும் கையில் கிடைத்துள்ளது.
அகிலுக்கு ரெயின் கோட் மற்றும் ஹெல்மெட் வாங்கிக்கொடுக்கவுள்ளேன். மீதமுள்ள பணத்தை அவரது கல்லூரி கட்டணத்துக்காக அவரிடமே கொடுத்து விடுவேன்' என ராபின் தன் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
