50,000 ஆண்டுகள் பழமையான “Zombie Virus" கண்டுபிடிப்பு! ஆபத்தானது- கடும் அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்
சுமார் ஐம்பதாயிரம் ஆண்டுகள் பழமையான வைரஸ் ஒன்று விஞ்ஞானிகளினால் ரஸ்யாவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
ரஸ்யாவின் உறைநிலையில் காணப்படும் ஓர் குளத்திலிருந்து இந்த வைரஸ்களை பிரான்ஸ் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
இந்த வைரஸ் மிகவும் ஆபத்தானது எனவும், கோவிட் பெருந்தொற்றை போன்றே பாரியளவில் பரவக்கூடியது எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த வைரஸ் தொற்று காரணமாக விலங்குகளுக்கு, தாவரங்களுக்கு அல்லது மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் பற்றி இன்னமும் துல்லியமாக கண்டறியப்படவில்லை.
உலகம் வெப்பமடைதல் காரணமாக பனிப்பாறை மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப முடியாத அளவிற்கு உருக்குலைந்து செல்கின்றது.
இதனால் மிகவும் ஆழமான பகுதிகளில் காணப்படும் கிருமிகள், நுண்ணங்கிகள் உள்ளிட்ட உயிரினங்கள் வெளிக்கிளம்பும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
AFP via Getty Images
விஞ்ஞானிகள் இந்த வகை நுண்ணங்கிகள் சிலவற்றுக்கு புத்துயிர் அளித்துள்ளனர். சுமார் 13 வகையான வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ரஸ்யாவின் யகுட்டியாவின் யுகிச்சீ அலாஸ் குளத்திலிருந்து பன்டொரா என்னும் வைஸ் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் கோவிட் போன்ற வைரஸ் தொற்றுக்கள் எதிர்காலத்தில் மேலும் மேலும் உருவாகும் சாத்தியங்கள் காணப்படுவதாக விஞ்ஞானிகள் எதிர்வுகூறியுள்ளனர்.
பண்டைய காலத்து வைரஸ் தொற்றுக்கள் மீளவும் தலைதூக்கும் சாத்தியங்கள் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இனந்தெரியாத வைரஸ் தொற்றுக்கள் சூரிய ஒளி, வெப்பம், ஒட்சிசன் மற்றும் ஏனைய புறச்சூழல் காரணிகளுடன் எவ்வாறு தாக்கமுறுகின்றது என்பது குறித்து ஆய்வுகள் முன்னெடுக்கப்பட உள்ளது.