சொமாட்டோ ஊழியர் வேண்டும் என தாக்கினாரா? இளம்பெண் மீது எழுந்த வழக்கு!
டந்த சில நாட்களுக்கு முன்னர் இளம்பெண் ஒருவர் சொமாட்டோ ஊழியர் தாக்கியதாக வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்திருந்தார். மேலும், அவர் அளித்த புகாரின் அடிப்படையில் சொமாட்டோ டெலிவரி ஊழியர் காமராஜை போலீசார் கைது செய்தனர். அதன் பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
அத்துடன், அவர் வேலையில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து, அவரிடம் நடத்திய விசாரணையில், சம்மந்தப்பட்ட அந்த நாடகமாடுவதாகவும், ஆர்டர் செய்த உணவை தாமதமாக கொண்டு சென்றதால், பணம் தராமல் தகாத வார்த்தையால் தன்னை திட்டியதாகவும், அடிக்க வந்த அவரை தடுத்தபோது, அவரது கையில் இருந்த மோதிரம் மூக்கில் சிராய்த்து காயம் ஏற்பட்டதாகவும் காமராஜ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சந்திராணி மீது போலீசில் தனியாக புகாரும் அளித்துள்ளார். இந்த நிலையில், இவ்வாறு இரு புகார்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
மேலும், டெலிவரி ஊழியர் காமராஜ் பேசுவதில் பலரும் உண்மை இருப்பதாக சமூக வலைதளங்களில் பலரும் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
தற்போது, டெலிவரி ஊழியர் காமராஜ் அளித்த புகாரின் அடிப்படையில், சந்திராணி மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடர்ந்துள்ளனர்.