சொமேட்டோ துணை நிறுவனர் ராஜினாமா.... திடீர் முடிவுக்கு காரணம் என்ன?
உணவு டெலிவரியில் முன்னிலை வகிக்கும் சொமேட்டோ நிறுவனம் டோர் டெலிவரி செய்வதில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில், தற்போது சொமேட்டோ நிறுவனத்தின் துணை நிறுவனரும் உயர் அதிகாரியுமான கௌரவ் குப்தா தனது பதவியை ராஜினாமா செய்தது மட்டும் அல்லாமல் நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளார்.
இவர், கடந்த 2015ஆம் ஆண்டில் சொமேட்டோ தளத்தில் டேபிள் ரிசர்வேஷன் பிரிவின் தலைவராக இணைந்தார் கௌரவ் குப்தா. இதன் பின்பு 2019ல் கௌரவ் குப்தா சொமேட்டோ நிறுவனத்தின் துணை நிறுவனராகப் பதவி உயர்வு பெற்றார்.
மேலும், சொமேட்டோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகப் பணியாற்றிய போது தான், சொமேட்டோ ப்ரோ திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் திட்ட அறிமுகத்திலும் கௌரவ் குப்தா முக்கியப் பங்கு வகித்தார்.
சொமேட்டோ ஐபிஓ வெளியிட்டு 2 மாதத்தில் துணை நிறுவனர் பதவியிலிருந்த கௌரவ் குப்தா போன்ற உயர் அதிகாரி வெளியேறுவது அதன் பங்கு வர்த்தகத்திலும் எதிரொலித்தது. சொமேட்டோ பங்குகள் 0.84 சதவீதம் உயர்ந்து 144.40 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து அவர் தெரிவித்தாவது, சொமேட்டோவின் நிறுவனரான தீபேந்தர் கோயல் வருந்தி டிவீட் செய்துள்ளார், இதற்குக் கௌரவ் குப்தாவும் பதில் அளித்துள்ளார்.
கௌரவ் குப்தாவின் திடீர் ராஜினாமா ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சொமேட்டோ நிறுவனர் தீபேந்தர் கோயல், சொமேட்டோ அடுத்த கட்டத்தை நோக்கி நகரப் போகிறது என ஊழியர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளார்.
I am taking a new turn in my life and will be starting a new chapter, taking a lot from this defining chapter of my life – the last 6 years @zomato. Grateful for all the experiences and all the love.https://t.co/LfUOzsz6sP
— Gaurav Gupta (@grvgpta) September 14, 2021