மற்றவர்களின் மனதை படிக்கும் ஆற்றல் கொண்ட ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா?
ஒருவரின் பிறந்த ராசி மற்றும் நட்சத்திரம் அவர்களின் வாழ்க்கை பாதை, தனிப்பட்ட குணநலன்கள், ஆளுமைச் சிறப்புகள், மேலும் அவர்கள் வெளிப்படுத்தும் நேர்மறை மற்றும் எதிர்மறை பண்புகள் ஆகியவற்றில் தாக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகிறது.
அந்த நம்பிக்கையின் அடிப்படையில், சில குறிப்பிட்ட ராசிகளில் பிறந்தவர்கள், தங்களைச் சுற்றியுள்ளவர்கள் தங்களிடம் எந்த நோக்கத்துடன் அல்லது எந்த மனநிலையுடன் பழகுகின்றார்கள் என்பதை எளிதில் உணரும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

மற்றவர்களின் நடத்தை, முகபாவனை மற்றும் பேசும் விதத்தை வைத்து அவர்களின் உண்மையான எண்ணங்களை புரிந்துகொள்ளும் திறன் இவர்களுக்கு இயல்பாகவே இருக்கும் எனவும் ஜோதிடர்கள் விளக்குகின்றனர்.
அவ்வாறு மனிதர்களின் மனதை வாசிக்கும் திறன் கொண்டவர்கள் என்று குறிப்பிடப்படும் ராசிகள் யாவை, அவற்றின் தனிச்சிறப்புகள் என்ன என்பதையும் இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
மீனம்

மீன ராசியில் பிறந்தவர்கள் முதல் பார்வையிஆலயே யார் எப்படிப்பட்டவர்கள், என்ன நோக்கத்தில் பழகுகின்றார்கள் என்பதை புரிந்துந்துக்கொள்ளும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.
ஆனால் இவர்களுக்கு ஒருவரை பிடித்துவிட்டால் அவர்கள் ஏமாற்றுகின்றார்கள் என தெரிந்த பின்னரும் கூட அவர்களுடன் சகிப்பு தன்மையுடன் பழகும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் மற்றவர்கள் மீது கொண்ருக்கும் இரக்கம் மற்றும் பரிவு இவர்களுக்கு இருக்கும் ஆற்றலையே வீயடித்துவிடுகின்றது என்று தான் சொல்ல வேண்டும்.
கடகம்

கடக ராசியில் பிறந்தவர்களின் மற்றவர்களின் மனநிலையை துல்லியமாக கணிப்பதில் பலே கில்லாடிகளாக இருப்பார்கள்.
ஆனால் அவர்கள் அன்புக்கு பாசத்துக்கு அடிமையாகிவிடுவார்கள். இவர்கள் ஒருவரை உண்மையாக நேசித்தால், இவர்கள் ஏமாற்றுகாரர்களாக இருந்தாலும், அவர்களை திருத்திவிடலாம் என்ற நம்பிக்கையில் இருப்பார்கள்.
இவர்களுக்கு மற்றவர்களின் உள்நோக்கத்தை கண்டறியும் ஆற்றல் இருந்தாலும் கூட இவர்களின் அதீத இரக்கம் இவர்களின் கண்களை மறைத்துவிடுகின்றது.
ரிஷபம்

மற்றவர்கள் தங்களை ஏமாற்றப்போகின்றார்கள் என்பதை முன்பே கணிப்பதில் இந்த ராசியிரை மிஞ்சுவதற்கு ஆளே கிடையாது.
இவர்கள் பார்ப்பதற்கு அமையாக தெரிந்தாலும் மற்றவர்களின் நடத்தைகளை எப்போதும் தெளிவாக கவனித்ர்துக்கொண்டே தான் இருப்பார்கள்.
அன்புக்குரியவர்களின் நடத்தையில் ஏற்படு்ம் சிறிய மாற்றங்களுக்கு கூட இவர்களுக்கு காரணம் தெரிந்திருக்கும்.இருப்பினும் இவர்களின் உண்மையான அன்பினால் மற்றவர்களின் விஷம குணத்தையும் தாங்கிக்கெண்டு அன்பு செலுத்துவார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |