ஒருவரை மட்டும் காதல் செய்யாத ராசிக்காரர்கள் - உங்க துணையும் இந்த ராசியா?
ஜோதிடத்தின்படி சில ராசிகளில் பிறந்தவர்கள் ஒருவரை காதலித்து அவாகளுடன் வாழ மாட்டார்கள் எனப்படுகின்றது.
காதலில் போர் அடிக்கும் ராசிகள்
காதல் என்பது எல்லோரது வாழ்க்கையிலும் இருக்கும் ஒரு விடயம். சிலர் டைம் பாஸ் செய்வதற்கும் காதலிப்பார்க். உண்மையாக காதலிப்பவர்களை இப்போதெல்லாம் பார்க்கவே முடியாது.
முதலில் காதலிக்கும் போது அந்த மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. இது தான் காதலிப்பவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆனால் இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் காதலிக்கும் போது தொடக்கத்தில் இருந்த சந்தோஷம் போக போக இருப்பது குறைவு.
இதை சிலர் போஷிடிவ் ஆக எடுத்துக்கொள்வார்கள். ஆனால் சிலருக்கு சலிப்பாகி விடும். அது குறிப்பிட்ட சில ராசிகள் தான் என ஜோதிடத்தில் கூறப்படுகின்றது.
இவர்களுக்கு காதல் சலிப்படைந்தால் அவர்கள் வேறு துணையை தேடி போவார்களாம். அவர்கள் யார் என்பதை பதிவில் பார்க்கலாம்.

மேஷம்
- மேஷ ராசிக்கார்கள் வாழ்க்கையில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற முயற்ச்சி கொண்டவர்கள். இவர்கள் ஒருவரை காதலித்தால் அவர்கள் அவர்களை முழுமையாக காதலிப்பார்கள். அதை அவரும் செய்ய வேண்டும் என நினைப்பார்கள்.
- இவர்களுக்கு எப்போதும் தன்னுடைய காதல் உறவில் ஆரம்பத்தில் இருந்த சிலிர்ப்பு வேண்டும் என நினைப்பார்கள்.
- அவர்களின் காதல் உறவில் உள்ள சிலிர்ப்பு குறைந்துவிட்டால், அவர்கள் விரைவில் அடுத்த சிலிர்ப்பைத் தரும் உறவை நோக்கி நகரத் தொடங்குவார்கள்.
சிம்மம்
- சிமம ராசிக்கார்கள் காதலில் மிகவும் கச்சிதமானவர்கள். ஆரம்பத்தில், அவர்களின் துணை பாராட்டுக்களால் அவர்களைப் பொழியும் போது, அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறார்கள்.
- அனால் ஒருவேளை காலப்போக்கில் இவை எல்லாம் குறைந்த விட்டால் உடனே வேறு துணை நோக்கி செல்வார்கள்.
- இவர்களுக்கு எப்போதும் தங்கள் துணை தங்களை சிறப்புடையவராக உணர வைக்க வேண்டுமாம் அது கிடைக்கவில்லை என்றால், உறவை முறித்துக் கொள்ள அவர்கள் ஒருபோதும் தயங்க மாட்டார்கள்.
மிதுனம்
- மிதுன ராசி காரர்கள் ஒரு விடயத்தில் நிலையற்றவர்கள் என கூறப்படுகின்றது. ஒரே விஷயத்துடன் அல்லது ஒரே நபருடன் நீண்ட காலம் இணைந்திருப்பது இவர்களுக்கு மிகவும் கடினமான விடயமாம்.
- அவர்கள் எந்தவொரு விஷயத்திலும் மற்றவர்களை விட விரைவாக சலிப்படைவார்கள். தங்கள் துணை எப்போது அவர்களுக்காக சுவாரஷ்ய விடயங்களை செய்யாவிட்டால் அவர்கள் உடனே வேறு துணையை தெடுவார்கள்.
- இவர்களை எப்போதும் மகிழ்விக்க கூடிய ஒரு துணையை தான் தேடுவார்களாம்.
விருச்சிகம்
- ரகசிய இயல்பு கொண்ட விருச்சிக ராசிக்காரர்கள் இந்த பட்டியலில் இருப்பது ஆச்சரியமில்லை. அவர்கள் பொதுவாக மிகவும் விசுவாசமானவர்களாக இருந்தாலும், ஒரு உறவின் ஆரம்பத்தில் அவர்கள் எல்லையில்லா ஆர்வத்தைக் காட்டுகிறார்கள்.
- ஆனால் அதே உறவில் எதிர்பார்ப்பும் ஆர்வமும் இல்லை எனும் பட்சத்தில் இவர்கள் முடிவு வெறாக இருக்கும்.
- அதாவது இவர்கள் காதலில் எவ்வளவு ஆழமாக காதலிக்கிறார்களோ அதே அளவிற்கு துணையிடம் இருந்தும் அதை எதிர்பார்ப்பார்கள். அரைகுரையாக காதல் செய்தால் இவர்கள் அந்த உறவை விட்டு நீங்கி விடுவார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).