உயிரே போனாலும் செய்த தவறை ஒப்புக்கொள்ளாத டாப் 3 ராசிகள்! உங்க ராசியும் இதுவா?
தவறு செய்யாத மனிதர்களே இல்லை. ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் தவறு செய்கிறார்கள். ஆனால், செய்த தவறை ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவம் அனைவரிடமும் இருப்பதில்லை.
ஜோதிட நம்பிக்கைகளின்படி, சில ராசிக்காரர்கள் எவ்வளவு கடினமான சூழ்நிலை வந்தாலும் தங்களின் தவறை எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ‘சாரி’ அல்லது ‘என் தவறு’ என்று சொல்வதற்குப் பதிலாக, தங்கள் செயல்களை நியாயப்படுத்தும் வகையில் மாத்திரமே பேசுவார்கள்.

அப்படி தலையே போனாலும் செய்த தவறை மட்டும் ஒப்புக்கொள்ள விரும்பாத ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்களாம்.
சிம்மம்

சிம்ம ராசியின் அதிபதி கிரகங்களின் ராஜாவான சூரியன். இது அகங்காரம், தன்னம்பிக்கை மற்றும் கௌரவத்தைக் குறிக்கிறது.
சிம்ம ராசிக்காரர்கள் இயல்பிலேயே தலைமைப் பண்பு கொண்டவர்கள்; அனைவரும் தங்களைப் பாராட்ட வேண்டும் என விரும்புவார்கள்.
இதனால், தாங்கள் செய்த தவறை ஒப்புக்கொள்வதும் மன்னிப்புக் கேட்பதும் அவர்களுக்கு கடினமாக இருக்கும். தாங்கள் வலிமையானவர்களாகத் தோன்ற வேண்டும் என்பதால், தவறை ஒப்புக்கொள்வது தங்களின் மதிப்பையும் இமேஜையும் பாதிக்கும் என நினைப்பார்கள்.
மேஷம்

மேஷ ராசியின் அதிபதி செயல் மற்றும் ஆக்ரோஷத்தின் கிரகமான செவ்வாய். மேஷ ராசிக்காரர்கள் துணிச்சலானவர்கள், தன்னம்பிக்கை மிக்கவர்கள், வேகமாகச் செயல்படுபவர்கள்.
ஆனால், தாங்கள் தவறு செய்திருந்தாலும் அதை நியாயப்படுத்தி மேலும் வாதிடுவார்கள். உணர்ச்சிவசப்பட்ட நேரங்களில் தங்களின் கருத்தே சரி என விடாப்பிடியாக இருப்பார்கள்.பின்னர் வருத்தப்பட்டாலும், வெளிப்படையாக மன்னிப்புக் கேட்க மாட்டார்கள்.
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் செவ்வாய் மற்றும் புளூட்டோவின் ஆதிக்கத்தில் உள்ளவர்கள். தங்களின் உணர்வுகளை எளிதில் வெளிப்படுத்தாத இவர்கள், தவறு செய்தாலும் அதை ஒப்புக்கொள்வதற்குப் பதிலாக மௌனம் காப்பார்கள்.
தங்களின் காரணங்கள் நியாயமானவை என நம்புவதால், மன்னிப்புக் கேட்பதைத் தவிர்த்து அந்தச் சூழ்நிலையிலிருந்து விலகிச் செல்ல முயல்வார்கள்.
கும்பம்

கும்ப ராசியினர் யுரேனஸ் மற்றும் சனியின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள். வித்தியாசமாகவும் தனித்துவமான கண்ணோட்டத்துடனும் சிந்திப்பார்கள்.தங்களின் நியாயமே சரி என நம்புவதால், தவறுகளை ஒப்புக்கொள்ளத் தயங்குவார்கள்.
தங்களின் காரணங்களை மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லை எனக் கூறி, உணர்வுப்பூர்வமான விவாதங்களைத் தவிர்ப்பார்கள். ஆனால் செய்த தவறை மட்டும் ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |