உதவி கேட்டால் உயிரையே விட்டுக்கொடுக்கும் ராசிக்காரர்கள் - நீங்க என்ன ராசி?
குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் எதவி என்று தன்னிடம் கேட்பவர்களுக்கு தன்னுடைய உயிரையும் கொடுப்பார்கள் என்று சொல்லப்படுகின்றது.
உதவி செய்யும் ராசிகள்
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒருவருடைய குணாதிசயங்கள் அவர்கள் பிறந்த ராசி மற்றும் அந்த ராசியை ஆளும் கிரகங்களின் படி அமைகிறது என கூறப்பட்டுள்ளது.
எல்லா ராசிக்காரர்களிடமும் ஏதாவது ஒரு நற்குணங்கள் இருந்தாலும் சில ராசியில் பிறந்தவர்கள் மற்றவர்களுக்கு உதவுவதை லட்சியமாகக் கொண்டுள்ளார்கள்.
யாராவது ஒருவர் துன்பப்படுவதை கண்டால் இவர்களுக்கு பொறுத்து கொள்ள முடியாதாம். பிறரின் துன்பத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் ஓடிச் சென்று உதவுவார்களாம். அப்படி உதவி செய்யும் தன்மை கொண்டவர்கள் யார் என்பதை பார்க்கலாம்.

கன்னி
கன்னி ராசியில் பிறந்தவர்கள் மற்றவர்களுக்கு உதவுவதை கடமையாக கருதுகின்றனர். இவர்களை சேவையின் சின்னம் என்று அழைக்கலாம். இவர்கள் ஒருவரின் தேவையை அறிந்து அவர்களுக்கு தேடித் தேடிச் சென்று உதவி செய்வார்கள் என கூறப்படுகின்றது. நாம் உதவி செய்தால், நமக்கு அவர்கள் உதவி செய்வார்கள் என்பது போன்ற எந்த எதிர்பார்ப்பும் இவர்களிடம் இருக்காது. ஒருவர் சிக்கலில் இருந்தால் வெறும் ஆறுதல் மட்டும் செல்லாமல் அதிலிருந்து அவர்களை விடுபட செய்வார்கள்.
கடகம்
சந்திரன் ஆளும் கடக ராசியில் பிறந்தவர்கள் இயல்பிலேயே தாயுள்ளம் கொண்டவர்கள். மற்றவர்கள் படும் கஷ்டத்தை தன் கஷ்டமாக பார்ப்பார்கள். பசியால் வாடுபவர்களுக்கு உணவு அளிப்பதிலும், ஆதரவற்றவர்களுக்கு புகலிடம் கொடுப்பதிலும் சிறந்தவர்கள். மற்றவர்களுக்கு ஒரு மனக்கஷ்டம் உன்றால் இவர்களின் தோள் இருக்கும். ஒருவர் கஷ்டப்படும் பொழுது அதை மேலோட்டமாக மட்டும் பார்க்காமல் ஆழமாகச் சென்று அவர்களின் கஷ்டங்களை புரிந்து கொண்டு உதவுவார்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் குரு பகவானால் ஆளப்படுபவர்கள். இவர்களுக்கு ஞானம், அறிவு, தர்ம சிந்தனை அதிகம். மற்றவர்களின் மகிழ்ச்சிக்காக தங்கள் சொந்த விருப்பங்களை கூட தியாகம் செய்வார்களாம். வாயில்லா ஜீவன்கள் முதல் மனிதர்கள் வரை அனைவரிடமும் கருணையுடன் நடந்து கொள்வார்கள். தனக்கு தீங்கு செய்தவர்கள் கஷ்டப்பட்டாலும் அவர்களின் கஷ்ட காலத்தில் உதவுவார்கள். சுயநலமின்மை, கருணை, மன்னிக்கும் குணம் ஆகியவற்றை தங்கள் உயிர் மூச்சாக நினைப்பார்கள்.
தனுசு
குரு பகவானின் ஆதிக்கம் கொண்ட தனுசு ராசிக்காரர்கள் தர்ம சிந்தனையாளர்கள். பண உதவியை விட ஒருவருடைய வாழ்க்கையை மேம்படுத்த நல்ல ஆறுதல்களையும், ஆலோசனைகளையும் அறிவையும் வழங்குவதில் சிறந்தவர்களாக விளங்குகின்றனர். யாரேனும் கஷ்டப்படுவதை பார்த்தால் தங்களிடம் பணம் இல்லாத போது கூட பிறரிடம் வாங்கி அவர்களுக்கு கொடுத்து உதவுவார்கள். தர்ம காரியங்கள், பொது சேவைகள் ஆகியவற்றில் அதிக ஈடுபாடு காட்டுவார்கள். மற்றவர்களுக்கு அநீதி நடந்தால் அதை இவர்களால் பாாத்துக்கொண்டு சம்மா இருக்க முடியாது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).