தங்களின் கவலைகளை மனதுக்குள்ளேயே புதைத்துக்கொள்ளும் 3 ராசிகள்... உங்க ராசியும் இதுவா?
ஜோதிட சஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதார நிலை, காதல், திருமணம்,தெழில், விசேட திறமைகள் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என குறிப்பிடப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் தங்களின் மனகவலைகளை மற்றவர்களிம் வெளிப்படுத்துவதை விடும்பாதவர்களாக இருப்பார்களாகவும் மற்றவர்களின் மகிழ்ச்சிக்காக தங்களின் தங்களின் கஷ்டங்களை மனதுக்குள்ளேயே புதைத்துக்கொள்ளும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அப்படி வெளியில் வலிமையாக இருப்பது போல தெரிந்தாலும்,உள்ளுக்குள் நிறைய வலிகளை சுமந்து கொண்டு வாழும் 3 ராசிகள் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்

அன்பின் கிரகமாக சுக்கிரனால் ஆள்ப்படும் ரிஷப ராசியினர் தங்களின் கருணை உள்ளத்துக்கும் நேர்மையான காதலுக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
பெரும்பாலும் தங்களின் உறவுகளுக்கான உழைத்து இவர்களுக்காகவே தங்களின் ஆசைகளை தியாகம் செய்துக்கொண்டு வாழும் குணம் இவர்களுக்கு பிறப்பிலேயே இருக்கும்.
இவர்கள் தங்களை சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக தங்கங்களின் எந்த கஷ்டத்தையும் வெளிப்படுத்தவே மாட்டார்கள்.
கன்னி

கன்னி ராசியினர் பார்ப்பதற்கு வலிமையானவர்கள் போல் தோன்றினாலும் மனதளவில் குழந்தை போல் மென்மையானவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் தங்களின் குடும்பத்துக்கான தங்களின் சுய விருப்பங்களையும் ஆசைகளையும் கூட தியாகம் செய்வதற்கு தயாராக இருப்பார்கள்.
இந்த ராசியியை பிறந்தவர்கள் தங்களின் சோகங்களை மற்றவர்களின் முன்னிலையில் காட்டிக்கொள்ள விரும்பவே மாட்டார்கள்.
துலாம்

இந்த ராசியினர் சற்று வித்தியாசமானவர்களான இருப்பார்கள். தங்களை சுற்றியிருப்பவர்கள் அனைனவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று மனதார ஆசைப்படும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இந்த ராசியினர் பொது வெளியில் எப்போதும் சிரித்த முகத்துடன் தோன்றினாலும் மனதில் சொல்ல முடியாத அளவுக்கு சோகங்களை தேக்கி வைத்திருப்பார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |