உடலின் வெவ்வேறு பகுதிகளில் கொழுப்பு தேங்குவது ஏன்? மருத்துவ விளக்கம்
பொதுவாக கொழுப்பு என்ற வார்த்தையைக் கேட்டாலே அது உடலுக்கு தீங்கு விளைவிப்பதாகவே பலரும் கருதுகின்றார்கள். ஆனால் உண்மையில், கொழுப்பு என்பது நமது உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு மிகவும் அவசியமான ஒரு ஊட்டச்சத்து ஆகும்.
உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குவது, முக்கியமான ஹார்மோன்களை உற்பத்தி செய்வது, செல்களின் வளர்ச்சியை ஆதரிப்பது போன்ற பல முக்கிய பணிகளை கொழுப்புக்கள் மேற்கொள்கின்றன.

மேலும், கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களான ஏ (A), டி (D), ஈ (E), கே (K) ஆகியவற்றை உடல் உறிஞ்சிக் கொள்ளவும், உடலின் முக்கிய உறுப்புகளை பாதுகாக்கவும் கொழுப்புக்கள் இன்றியமையாதது.
ஆனால், எந்த ஒரு நல்ல விஷயமும் அளவுக்கு மீறினால் பிரச்சினையாக மாறுவது போல, கொழுப்பையும் அதிகமாக உட்கொள்வது உடல்நல பாதிப்புகளுக்கு வழிவகுக்கலாம். இதன் விளைவாக உடல் பருமன், இதய நோய்கள், நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகயை சந்திக்க வேண்டி ஏற்படும்.

இன்றைய வாழ்க்கை முறையில் உடல் பருமன் என்பது உலகளவில் அதிகரித்து வரும் ஒரு பிரச்சினையாக உள்ளது. ஆனால், உடல் பருமன் அடையும் அனைவருக்கும் ஒரே மாதிரியாக கொழுப்பு தேங்குவதில்லை என்பதுதான் சுவாரஸ்யமான விஷயம்.
சிலருக்கு அடிவயிற்றுப் பகுதியில் அதிகமாக கொழுப்பு சேரும். சிலருக்கு இடுப்பு மற்றும் தொடைப் பகுதிகளில் தேங்கும். மற்ற சிலருக்கு கைகள், தோள்கள் அல்லது முதுகுப் பகுதிகளில் கூட கொழுப்பு அதிகமாகக் காணப்படும். அப்படியானால், ஏன் ஒவ்வொருவரின் உடலிலும் கொழுப்பு வெவ்வேறு பகுதிகளில் சேமிக்கப்படுகிறது? இதற்குப் பின்னால் இருக்கும் முக்கிய காரணிகளில் ஒன்று ஹார்மோன்கள்.

நமது உடலில் பல்வேறு ஹார்மோன்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஹார்மோன்களின் அளவில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது ஏற்றத்தாழ்வுகள், உடலில் எந்தப் பகுதியில் கொழுப்பு சேமிக்கப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கின்றது.
அதனால்தான் சிலருக்கு வயிற்றுப் பகுதியில், சிலருக்கு இடுப்புப் பகுதியில், இன்னும் சிலருக்கு உடலின் பிற பகுதிகளில் கொழுப்பு அதிகமாகத் தேங்குகிறது.
உடலின் வெவ்வேறு பகுதிகளில் கொழுப்பு ஏன் தேங்குகிறது? எந்த ஹார்மோன் எந்தப் பகுதியில் கொழுப்பு சேர காரணமாகிறது? என்பது குறித்து மருத்துவர் ஜனனி சுப்புராஜ் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விரிவாக விளக்கியுள்ளார். இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

No Exercise, No Diet! உடல் எடையை கட்டுக்குள் வைக்கும் கடுக்காய் பொடி... எப்படி சாப்பிடனும்னு தெரியுமா?
வெவ்வேறு பகுதிகளில் கொழுப்பு தேங்க காரணம்
முகம் மற்றும் முதுகுப் பகுதியில் கொழுப்பு
கார்டிசோல் (மன அழுத்த ஹார்மோன்) அதிகரிப்புடன் தொடர்புடையதாக இருக்கலாம். மன அழுத்தத்தைக் குறைக்க தியானம், யோகா, உடற்பயிற்சி மற்றும் மகிழ்ச்சியான செயல்பாடுகளில் ஈடுபடுவதால் இந்த பகுதிகளில் கொழுப்பு தேங்குவதை கட்டுப்படுத்தலாம்.
அடிவயிற்றுப் பகுதியில் கொழுப்பு
உடலில் இன்சுலின் அளவு அதிகரிப்பால் இந்த பகுதியில் கொழுப்பு தேங்க வாய்ப்புள்ளது. திடீரென தொப்பை அதிகரித்தால் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.
இடுப்பு மற்றும் தொடைப் பகுதியில் கொழுப்பு
உடலில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அதிகரிப்புடன் தொடர்புடையதாக இருக்கலாம்.
கைகளில் கொழுப்பு மற்றும் தசை தளர்ச்சி
தைராய்டு ஹார்மோன் சமநிலையின்மையுடன் தொடர்புடையதாக இருக்கலாம். உடலில் தைராய்டு ஹார்மோன் அதிகமாக இருப்பதால் இந்த பகுதிகளில் கொழுப்பு அதிகமாக தேங்கும்.
கால் வீக்கம் அல்லது உடல் தசை வீக்கம்
ஆல்டோஸ்டிரோன் ஹார்மோன் அதிகரிப்புடன் தொடர்புடையதாக இருக்கலாம். குறிப்பு: உடலில் கொழுப்பு தேங்கும் இடம் மட்டுமே காரணத்தை உறுதியாகக் காட்டாது. ஹார்மோன் மாற்றங்கள் அல்லது பிற உடல்நலப் பிரச்சினைகள் குறித்து சந்தேகம் இருந்தால் மருத்துவ ஆலோச பெற வேண்டியது அவசியம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |