பழிவாங்கும் உணர்வு கொண்ட 5 ராசிக்காரர்கள்! இவங்ககிட்ட எப்பவும் வம்பு வைச்சுக்காதீங்க
பொதுவாக நம் அனைவருக்கும் கோபம், பழிவாங்கும் குணம் இயல்பாகவே இருக்கும்.
இதனை யாராலும் கட்டுபடுத்தவும், தடுக்கவும் முடியாது. இதன் தீவிர தன்மை சிலரின் குணங்களை பொறுத்து இருக்கின்றது.
இதில் வேடிக்கையான விடயம் என்னவென்றால் மனிதர்களை போல் மிருகங்களுக்கும் பலி வாங்கும் குணம் இருக்கின்றது.
ஜோதிட சாம்ராஜ்யத்தில், சில ராசிக்காரர்கள் தவறிழைக்கும் பொழுது மற்றவர்களை மன்னிக்கும் குணம் இருக்காது.
பழிவாங்குவதற்கு தீவிரமான வெறியும், விடாமுயற்சியும் அவசியம் என அவர்கள் நினைத்து கொண்டு வேலைகளை செய்து கொண்டிருப்பார்கள்.
அந்த வகையில் பலிவாங்கும் குணம் அதிகமாக கொண்ட ராசிக்காரர்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
பழிவாங்கும் குணம் கொண்ட ராசிக்காரர்கள்
1. விருச்சிகம்
ராசிகளில் இந்த ராசிக்காரர்களுக்கு பலி வாங்கும் குணம் இயற்கையாகவே இருக்கும். அவர்களை யாராவது ஏமாற்றும் பொழுது இந்த குணம் இயற்கையாகவே வளர ஆரம்பிக்கும்.
இது போன்று நடந்து கொள்வதால் அவர்களின் வெறுப்புணர்வு அதிகமாகும். இவர்களின் எதிரிகளை உண்டு இல்ல என்று ஆக்கி விடுவார்கள்.
2. ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு பிடிவாதம் மற்றும் வாதாடும் குணம் இருக்கும். இதனால் இவர்களுக்கு யாராவது துரோகம் செய்தால் அதனை பொறுத்து கொள்ள முடியாமல் கத்துவார்கள்.
இதனை தொடர்ந்து அவர்களை எப்படியாவது பலி வாங்க வேண்டும் என வேலை பார்ப்பார்கள்.
3. கடகம்
கடக ராசியில் பிறந்தவர்கள் உணர்ச்சிகளுடன் ஆழமான தொடர்பைக் கொண்டவர்களாக காணப்படுவார்கள். பலிவாங்குவது என நினைத்து வதந்திகளை பரப்புவார்கள். இதன் காரணமாக மற்றவர்கள் மத்தியில் இவர்களுக்கு இருக்கும் மதிப்பு போய் விடும்.
4. சிம்மம்
சூரியனால் ஆளப்படும் ராசிக்காரர்களில் சிம்ம ராசி தான் முதல் இடத்தில் இருக்கின்றது. இவர்களுக்கு பெருமை மற்றும் சுய மதிப்பு அதிகமாக இருக்கும். இவர்கள் புகழ், ஈகோ இது போன்ற விடயங்களுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
இதில் ஏதாவது அவமானங்கள் ஏற்பட்டால் கடுமையாக பலி வாங்குவார்கள். நேரடிமோதல்களில் ஈடுபடுவதன் மூலமோ, உடைமைகளை சேதப்படுத்துவதன் மூலமோ அல்லது தங்களுக்கு அநீதி இழைத்தவர்கள் நற்பெயரை கெடுப்பார்கள்.
5.மிதுனம்
கூர்மையான அறிவுத்திறன் மற்றும் வியூகம் கொண்டவர்களாக மிதுன ராசிக்காரர்கள் இருப்பார்கள். இவர்களுக்கு ஏதாவது துரோகம் ஏற்படும் போது அதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் கத்தி கதறுவார்கள்.
துரோகம் ஏற்படும் பொழுது அவர்களுக்கு அதனை புரிய வைப்பதற்காக பலிவாங்குவார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |