ஜூன் மாதம் சூரியனுடன் சேர்ந்த புதன் அதிஸ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் யார்யார் தெரியுமா?
சூரியபகவான் நவக்கிரகங்களின் தலைவனாக இருப்பவர் ஆவார். இவர் நவக்கிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக விளங்கி வருகின்றார்.
இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சூரிய பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.
இந்த நிலையில் சூரியன் மற்றும் புதன் இவை இரண்டின் கிரக சேர்க்கையால் சில ராசிகள் அதிஸ்டத்தை தன்வயமாக்கப்போகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்கலாம்.
ரிஷபம்
நீங்கள் இதுவரை இருந்ததை விட உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்க முடியும். ஆடம்பர வாழ்க்கை உங்களுக்கு ஒரு வரப்பரசாதமாகவே கிடைக்கும். பணம் தேடி தேடி வரும்.
வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். மற்றவர்களிடத்தில் உங்களுடைய செல்வாக்கு அதிகரிக்கும்.
மிதுனம்
உங்களுக்கு இதுவரை இருந்ததை விட ஜூன் மாதத்தில் இருந்து உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும். எதிரிகளால் உங்களுக்கு வந்த பிர்சனை குறையும்.
மற்றவர்களிடத்தில் மரியாதை கூடியளவில் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து முன்னேற்றம் உண்டாகும்.
சிம்மம்
சூரியன் மற்றும் புதன் சேர்க்கையால் அதிஸ்டத்தை அள்ளப்போகும் ராசியில் நீங்களும் ஒருவராக உள்ளீர்கள். நிதி நிலமையில் ஏற்பட்ட சிக்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.
இந்த காலகட்டத்தில் வருமானம் உங்களுக்கு அதிகரிக்கும். விடாமுயற்சி நல்ல பலன்களை பெற்றுத் தரும் வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. புதிய முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும். பழைய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.