சகுனியவே மிஞ்சும் தந்திரக்கார 4 ராசிகள்...
12 ராசிகளுள் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயமும் பண்புகளும் உண்டு.
அந்த வகையில் சில ராசிகள் தந்திரமானவை என்று கூறப்படுகிறது. பொதுவாக தந்திரம் என்றால் அது புத்திசாலித்தனத்துடன் தொடர்புடையது.
மிதுனம்
மற்றவர்களை எளிதில் நம்ப வைக்கும் திறன் படைத்தவர்கள். இவர்களின் ஆளுமையில் இரட்டைத் தன்மை இருக்கும். வசீகரமானவர்களாக இருப்பார்கள். யாராலும் எளிதில் கணிக்க முடியாதவர்களாகவும் தந்திரமானவராகவும் காணப்படுவர்.
துலாம்
தாம் நினைத்ததை அடைய முடியாவிட்டால் தந்திரத்தை பயன்படுத்திக் கொள்வார்கள். தம்மை சிறப்பானவர்களாக உணர வைப்பதில் துலாம் ராசிக்காரர்கள் சிறந்தவர்கள். புத்திசாலித்தனம், இராஜதந்திரம் நிறைந்தவர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் பொதுவாகவே இரகசிய ஆளுமை கொண்டவர்களாக காணப்படுகின்றனர். இவர்கள் மற்றவர்களை கையாள விரும்பும்போது அவர்களுக்கு நன்மைகளை மட்டுமே செய்கிறார்கள். இவர்கள் தங்கள் உண்மையான எண்ணங்களை மிகவும் அழகாக மறைக்கக்கூடியவர்கள். தங்கள் குறிக்கோள்களையும் இலக்குகளையும் அடைய அதிக தூரம் செல்வார்கள்.
மீனம்
மற்றவர்கள் எளிதாக தவறவிடும் நுட்பமான விஷயங்களை எளிதாக கண்டறிவார்கள். மற்றவர்களின் உணர்ச்சிகளை எளிதாக படிக்கக் கூடியவர்கள். சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தங்களது நடத்தைகளை மாற்றக் கூடியவர்கள்.