அதிஷ்ட கதவை திறக்கும் குரு: இன்றுடன் வாழ்கை மாறப்போகும் ராசிகள் நீங்க எந்த ராசி?
நவகிரகங்களில் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளை தரும் நாயகனாக திகழ்ந்து வருகின்றார்.
குரு பகவான் செவ்வாய் பகவானின் நட்சத்திரமாக விளங்கக்கூடிய மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பயணம் செய்து வருகிறார். குரு பகவான் கடந்த மே மாதம் 1ம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் மாறினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்.
அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி அன்று மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குரு பகவான் நுழைந்தார். வருகின்ற நவம்பர் 28ஆம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார்.
இதனால் இது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.இதன் மூலம் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகும் ராசிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

மேஷம்
- குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் மேஷ ராசிக்கு வெற்றியை குவிக்கும்.
- குருவின் அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக உங்களை தேடி வரும்.நீங்கள் அனைத்து துறைகளிலும் வெற்றி காண்பீர்கள்.
- புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் உங்களை தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வுடன் பாராட்டுகள் கிடைக்கக்கூடும்.
- வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
- வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் தேடி வர வாய்ப்பு உள்ளது. புதிய தொழிலை தொடங்க நினைத்தால் சந்தேகமின்றி தொடங்கலாம் வெற்றி நிச்சயம்.
- நல்ல பலன்கள் உங்களை தேடி வரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உங்களை தேடி வரும்.
- நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் அன்பும் கிடைக்கும்.
கடகம்

- குருபகவானின் நட்சத்திர இடமாற்றத்தால் நீங்கள் செல்வக் கடலில் மூழ்கப்போகிறீர்கள்.
- முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகமாக கிடைக்கும். இதனால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- புதிய முதலீடுகள் திருப்தியடையும் அளவில் லாபத்தை பெற்று தரும்.
- வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
- வியாபாரத்தில் கடுமையான உழைப்பு காரணமாக முன்னேற்றம் கிடைக்கக்கூடும். நல்ல லாபம் உங்களை வந்து சேரும்.
- நிறைய பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்புகள் உங்களை வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்

- குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு வாழ்க்கையே நல்ல முன்னேற்றத்தை பெற்றுத் தரப் போகின்றது.
- புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். இதனால் உங்களுக்கு உதவி கிடைக்கும். பல நன்மைகள் உங்களைத் தேடி வந்துகொண்டே இருக்கும்.
- உயர் அதிகாரிகள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். உங்களது வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
- நிதி நிலைமைகள் இருந்ததை விட நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு அவ்வப்போது பிரச்சனை வந்தாலும் தீவிரமாகாது.
- அதிர்ஷ்டம் மற்றும் அதிசயம் உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராமல் நிகழப் போகின்றது.   
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        