சிம்மத்தில் சுக்கிரன் பெயர்ச்சி: ராஜயோகம் பெறப்போகும் ராசிகாரர்கள் யார் யார்னு தெரியுமா?
ஜோதிடத்தின் அடிப்படையில், அனைத்து கிரகங்களுக்கும் அவற்றின் தனிப்பட்ட முக்கியத்துவம் காணப்படுகின்றது. அனைத்து கிரகங்களின் ராசி மற்றும் நட்சத்திர மாற்றங்களும், இயக்க மாற்றங்களும், உதய மற்றும் அஸ்தமன நிலைகளும், வக்ர பெயர்ச்சியும் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
ஐஸ்வரியத்தை அளிப்பவர் சுக்கிரன் தனது ராசியை மாற்றி சிம்ம ராசி அடைந்துள்ளார்.சுக்கிரன் சாதகமாக இருந்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் வளமும் கிடைக்கும்.
தற்போது சுக்கிரன் கடகத்தை விட்டு சிம்ம ராசியில் நூழைந்துள்ளார். எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி வரை சுக்கிரன் சிம்ம ராசியில் இருப்பார். சுக்கிரனின் சஞ்சாரத்தால் எந்தெந்த ராசிக்காரர்கள் பலன் அடைகிறார்கள் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷப ராசி
சுக்கிரனின் இந்த ராசி மாற்றம் ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை நிறைந்ததாக அமையும்.
ரிஷபத்தை ஆளும் கிரகம் சுக்கிரன் என்பதால், எப்போதும் ரிஷப ராசிக்காரர்களுக்கு சுக்கிரனுன் அருள் அதிகமாகவே இருக்கும்.
சுக்கிரன் சஞ்சாரத்தால் இவர்களின் வாழ்வில் சுகபோகங்களும், வசதிகளும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.
இந்த நேரத்தி இந்த ராசிக்காரர்களின் நம்பிக்கை அதிகரிக்கும். அனைத்து செயல்களிலும் வெற்றி பெறுவீர்கள். திருமணத்திற்காக காத்திருப்பவர்கள் நல்ல வரன் கூடிவரும்.
துலா ராசி
துலா ராசியை ஆளும் கிரகம் சுக்கிரன் ஆவார். இந்நிலையில் சுக்கிரனின் சஞ்சாரம் துலாம் ராசிக்காரர்களுக்கு வாழ்வில் பல நல்ல நன்மைகளை கொடுக்கும்.
இவர்கள் செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவார்கள். வெகு நாட்களாக தாமதம் ஆகிக்கொண்டு இருந்த சில பெரிய வேலைகளை முடிவுக்கு வரும். இந்த காலத்தில் தொட்ட காரியம் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். நிதி பிரச்சனைகள் அனைத்தும் தீரும். இந்த நேரம் தொழிலதிபர்களுக்கும் மிகவும் சாதகமாக இருக்கும். பெரிய பலன்கள் கிடைக்கக்கூடும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
சிம்ம ராசி
சுக்கிரன் சிம்மத்தில் பெயர்ச்சி ஆவதால் சிம்ம ராசிக்காரர்களுக்கு இவர்கள் விரும்பிய பலன்கள் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வருமானமும் அதிகரிக்கும்.
நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் இப்போது வெற்றிகரமாக முடிவடையும். சில குறிப்பிட்ட தனித்துவமான வேலைகளில் வெற்றி பெறுவார்கள். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகுவதுடன் பல நல்ல செய்திகள் வந்தடையும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |