2026 இல் சனி பகவானிடம் இருந்து விடைபெறும் ராசிகள் - உங்க ராசி என்ன?
2026 ஆம் ஆண்டில் சனி பகவான் 4 ராசிகளுக்கு சுப பலன்களையும், அதிர்ஷ்டத்தையும் வாரி வழங்க இருக்கிறார். அதுவும் இந்த ராசிகளுக்கு ஏழரை சனியும் முடிகிறதாம்.
சனி பெயர்ச்சி 2026
2026 ஆம் ஆண்டு ஜோதிட ரீதியாக எப்படி இருக்க போகிறது என்பதை அறிவதற்கு பலரும் ஆவலாக இருக்கின்றனர். குறிப்பாக சனி பகவானின் நிலை குறித்து தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
2026 ஆம் ஆண்டு சனி பகவான் மீன ராசியில் சஞ்சரிக்கிறார். இவர் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது ராசியை மாற்றிக்கொள்வார். அந்த வகையில் 2026 முழுவதும் மீன ராசியிலேயே பயணிக்கிறார்.
இதன் காரணமாக வரும் புதிய ஆண்டில் சனி பகவானின் ஆசியை நான்கு ராசிக்காரர்கள் முழுமையாகப் பெற இருக்கின்றனர். அந்த ராசிகள் யார் என்பதை பார்க்கலாம்.

ரிஷபம்
- ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி பகவான் 11-வது வீடான லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இந்த லாப ஸ்தானம் உங்களுக்கு பெரிய லாபத்தை கொடுக்கும்.
- எனவே 2026 ஆம் ஆண்டு ரிஷப ராசிக்காரர்கள் பொருளாதார ரீதியாக புதிய உயரத்தை பெறப்போகிறீர்கள். இந்த ஆண்டில் உங்களுக்கு பணக்கஷ்டம் எதுவும் ஏற்படாது.
- இதனால் நீங்கள் தொழிலில் புதிய முதலீடுகளை செய்து லாபத்தை அதிகரிப்பீர்கள். வாங்காமல் இருந்த பணம் வசூலாகும். நீண்ட நாள் கனவான புது வீடு வாங்கும் யோகம் உருவாகும். சனி பகவான் உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களை இரட்டிப்பாக்கி தருவார்.
கன்னி
- கன்னி ராசிக்கு சனி பகவான் ஆறாம் வீட்டில் சஞ்சரிக்க இருக்கிறார். ஆறாம் வீடு சத்ரு, ரோக ஸ்தானம் ஆகும். பொதுவாக சனி பகவான் 3, 6, 11 ஆகிய இடங்களில் அமரும் பொழுது அது அந்த ராசியினருக்கு அசுர வளர்ச்சியைத் தரும் என்பது விதியாகும்.
- இந்த அமர்வால் உங்கள் எதிரிகளை வீழ்த்தும் வல்லமையைப் பெறுவீர்கள். நீண்ட நாள் கடன் பிரச்சனை தீர்ந்து விடுபடுவீர்கள்.
- உங்களை வாட்டி வதைத்து வந்த உடல்நலக் கோளாறுகள் நீங்கி, மனநிம்மதி பெறுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கும்.
தனுசு
- தனுசு ராசியினர் 2026 ஆம் ஆண்டு ஏழரை சனி முழுமையாக முடிந்து விடுதலைப் பெற இருக்கிறீர்ரகள். சனி பகவான் 4ஆம் வீடான சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருக்கிறார்.
- இதன் காரணமாக இத்தனை ஆண்டுகள் ஏழரை சனியால் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் விலகும். சனி பகவான் உங்களுக்கு சுப போகங்களை வழங்கத் தொடங்குவார்.
- குடும்பத்தில் இருந்த கஷ்டங்கள், குழப்பங்கள் அனைத்தும் நீங்கி அமைதி நிலவும். திருமணம், வளைகாப்பு போன்ற தடைபட்டு வந்த சுபகாரியங்கள் இனிமையாக நடக்க ஆரம்பிக்கும்.
- புதிய வாகனம், சொத்துக்கள் வாங்கும் யோகம் சிறப்பாக உள்ளது. சனி பகவானின் பரிபூரண ஆசி இருப்பதால் 2026 ஆம் ஆண்டு மகிழ்ச்சி கொடுக்கும் ஆண்டாக அமையும்.
கும்பம்
- கும்ப ராசிக்காரர்களுக்கு சனி பகவான் அதிபதியாவார். 2026 இல் இவர்களுக்கு ஏழரை சனியின் கடைசி கட்டமான பாத சனி நடக்கிறது.
- சனி பகவான் தனது சொந்த ராசியின் மீதான பார்வையை விலக்கிக் கொள்கிறார். இதனால் இவர்களுக்கு அதிர்ஷடத்தை அள்ளி கொடுப்பார்.
- எனவே 2026 ஆம் ஆண்டு கும்ப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காற்று வீசும் ஆண்டாக இருக்கும்.
- வெளிநாடு செல்லும் முயற்சிகள் கைகூடும். தொழிலில் இருந்த மந்த நிலைகள் நீங்கி புதிய கிளைகளை தொடங்கும் அளவிற்கு வளர்ச்சி ஏற்படும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).