வக்ர நிவர்த்தி அடையும் சனி பகவான்.. யோகம் பெறும் 4 ராசிகாரர்கள் யார் யார்னு தெரியுமா?
சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர் பலன்களை அளிக்கிறார். ஒருவருக்கு சனி பகவானின் அருள் இருந்தால், அந்த நபரின் வாழ்க்கையில் எந்த குறையும் இருக்காது. அவருக்கு அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
அதே சமயம், சனி பகவானின் கோவ பார்வை ஒருவர் மீது பட்டால், அவர் பல வித பிரச்சனைகளை எதிகொள்ள வேண்டி வரக்கூடும். ஜோதிடத்தில் சனி பலவானுக்கு மிக அதிக முக்கியத்துவம் உள்ளது.
அவரது பெயர்ச்சிகளும் நிலைகளும் பல வித மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. அனைத்து கிரகங்களையும் விட சனி பகவான் மிக மெதுவாக நகரும் கிரகமாக இருக்கிறார்.
ஒவ்வொரு ராசியிலும் அவர் தற்போது சனிபகவான் கும்ப ராசியில் வக்ர நிலையில் உள்ளார். அவர் நவம்பர் 4 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைவார்.
சனி பகவானின் வக்ர நிவர்த்தியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இதனால் அற்புதமான நன்மைகள் உண்டாகும்.
கும்ப ராசி
சனியின் வக்ர நிவர்த்தி கும்ப ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்களைக் கொண்டு வரும். கும்ப ராசிக்கு அதிபதி சனி. தற்போது அவர் கும்ப ராசியில்தான் சஞ்சரித்துள்ளார்.
கும்ப ராசியில் சனியின் வக்ர நிவர்த்தி இந்த ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கையை உயர்த்தக்கூடியதாக இருக்கும். உயர் பதவியில் இருப்பவர்களுடன் உறவை வளர்த்துக் கொள்ள சந்தர்ப்பம் கிட்டும். பணவரவு கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். தொழிலில் நல்ல வாய்ப்புகளைப் பெறலாம். கூட்டுத் தொழிலில் முயற்சிகள் பெரும் வெற்றியளிக்கும்.
ரிஷப ராசி
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர நிவர்த்தி மிகுந்த நன்மைகளை உண்டாக்கம்.
உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.சனியின் மாற்றத்தால் உருவாகும் ராஜயோகம் இவர்களின் தலைவிதியை மாற்றியமைக்கும் சக்தி கொண்டதாக அமையும்.
தொழிலில் சாதகமான முன்னேற்றம் கிடைக்கும். உங்கள் தொழிலில் தங்கமான வாய்ப்புகள் அமையும். இது உங்களுக்கு உயர்ந்த பதவியையும் அதிக சம்பளத்தையும் பெற்றுத்தரும்.
நீங்கள் பெரிய நிதி நன்மைகளைப் பெறுவீர்கள். இது உங்கள் வாழ்க்கையில் நிதி செழிப்பைக் கொண்டுவரும். வியாபாரம் விரிவடையும். இன்னும் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண வாய்ப்புகள் கூடிவரும்.
மிதுன ராசி
நவம்பர் மாதத்தில் ஏற்படவுள்ள சனியின் வக்ர நிவர்த்தி மிதுன ராசிக்காரர்களுக்கு அதிக நன்மைகளை வழங்கும்.
கும்ப ராசியில் சனி வக்ர நிவர்த்தி அடைவதால் மிதுன ராசிக்காரர்களின் பொருளாதார நிலை வலுப்பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இக்காலகட்டத்தில் சனி நேரடியாக இயக்கத்தில் இருப்பதால் நிலம், வாகனம் மற்றும் வாகனம் வாங்கக் கூடிய வாய்ப்புக்கள் அமையும்.
இந்த காலப்பகுதியில் தொழிலில் வெற்றி கிடைக்கும். இந்த நேரத்தில் மகா லட்சுமியின் ஆசீர்வாதம் கிடைக்கும் இதனால் செல்வம் அதிகரிக்கும்.
சிம்ம ராசி
சனியின் வக்ர நிவர்த்தியால் உருவாகும் ஷஷ ராஜயோகம் சிம்ம ராசிக்காரர்களுக்கு பலன் தரும்.உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குறிப்பாக குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும்.
திருமணமானவர்களின் வாழ்வில் மகிழ்ச்சி இருக்கும். கணவன் மனைவி இடையே உறவு வலுவாக இருக்கும். ஆடம்பர பொருட்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.பொருளாதார ரீதியாகவும் பல நன்மைகள் உண்டாகும். சர்ச்சைக்குரிய விஷயங்களில் தீர்வு கிட்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |