சோம்பேறிகளாகவே பிறப்பெடுத்த 3 பெண் ராசிகள்... இவர்கள் காரியவாதிகளாம்!
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதார நிலை, காதல் வாழ்க்கை, விசேட ஆளுமைகள் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் இயல்பாகவே அதிக சோம்பேறித்தனம் கொண்டவர்களாக இருப்பார்கள். தங்களை கஷ்டப்படுத்திக்கொள்ளும் எந்த வேலையையும் இவர்கள் செய்ய விரும்புவது கிடையாது.

ஆனால் அதே சமயம் சிறந்த அறிவாற்றல் கொண்டவர்களாகவும் சரியாக காய்களை நகர்த்தி தங்களின் காரியத்தை சாதித்துக்கொள்வதில் திறமைசாலிகளாகவும் இருப்பார்கள். அப்படிப்பட்ட பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் பிடிவாத குணம் கொண்டவர்கள் என்பது பிரபலமானது, ஆனால் அவர்கள் ஆறுதலையும் சொகுசு வாழ்க்கையையும் விரும்புவதால் அவர்கள் சோம்பேறிகள் என்ற கருத்து மற்றவர்கள் மத்தியில் காணப்படும்.
உண்மையில் இவர்கள் உழைப்பதில் சோம்பேறிகள் இல்லை ஆனால் கடினமான வேலைகளை செய்துதான் சம்பாதிக்க வேண்டும் என்பதில் உடன்பாடு இல்லாதவர்களாக இருப்பார்கள். அவர்கள் சொகுசான வாழ்க்கை முறையின் மீது அதிக நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் மணிக்கணக்கில் சுற்றித் திரிந்து, தேநீர் அருந்தி அல்லது சமூக ஊடகங்களை உலாவுவதை விரும்புவார்கள்.ஆனால் கடைசி நிமிடத்தில் ஒரு பணியைச் செய்தாலும் அதைச் சரியாகவும் மிகவும் நேர்த்தியாகவும் செய்வார்கள்.
துலாம்

துலாம் ராசிக்காரர்கள் பெரும்பாலும் முடிவெடுக்க முடியாதவர்கள் அல்லது நிதானமானவர்கள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள், இவர்கள் எந்த விடயத்தை ஆரம்பிக்கும் முன்னரும் சரியான நேரத்தை எதிர்ப்பார்த்து காத்திருப்பார்கள்.
இவர்களின் இந்த குணம் பார்ப்பவர்களுக்கு இவர்கள் சோம்பேறிகளாக தோன்றுவதற்கு முக்கிய காரணமாக இருக்கும். வாழ்க்கையில் அவசரப்படாமல், அரிதாகவே அதிகமாக உழைக்கும் இவர்கள் சரியாக நேரத்தில் சரியானதை செய்வார்கள்.
அவர்கள் எல்லாம் சரியாக வரிசையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். மற்றவர்கள் அனைவரும் விரைவான முடிவுகளை எடுக்கத் துடிக்கும்போது, துலாம் ராசிக்காரர்கள் பல கோணங்களை மதிப்பிட்டு, சிறந்த தருணத்திற்காகக் காத்திருக்கிறார்கள்.
கும்பம்

கும்ப ராசியினர் பெரும்பாலும் சிந்தனையில் மூழ்கி இருப்பார்கள். அவர்கள் எந்த விடயத்தையும் எடுத்தவுடன் முடிவுசெய்யாமல் பல கோணங்களிலும் சிந்தித்து முடிவு செய்யும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களிள் அதிக சிந்தனை இவர்களை மற்றவர்கள் மத்தியில் சோம்பேறிகளாக காட்டுகின்றது. ரகசியம் என்னவென்றால், கும்ப ராசிக்காரர்கள் மனதளவில் சுறுசுறுப்பானவர்கள். அவர்கள் சரியாக நேரம் வரும் போது தங்களின் காரியத்தை சாதித்துக்கொள்வார்கள்.
அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதாகத் தோன்றலாம், ஆனால் அவர்கள் உண்மையில் வழக்கத்திற்கு மாறான வழிகளில் தகவல்களைச் செயலாக்குகிறார்கள். ஆனால் தங்களை பரபரப்பாக காட்டிக்கொள்ள விரும்புவது கிடையாது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |