புகுந்த வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் 3 ராசிப் பெண்கள்! உங்க ராசியும் இதுவா?
ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒருவரின் ராசி அவர்களின் ஆளுமை, குணநலன்கள், சிந்தனை முறை மற்றும் வாழ்க்கைப் பயணத்தில் ஏற்படக்கூடிய பல்வேறு அம்சங்களில் நேரடியாக தாக்கம் செலுத்தும் என்று தொன்றுதொட்டு நம்பப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில், ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான பலன்களும் சிறப்புகளும் இருப்பதாக ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

அந்த வகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் இயற்கையாகவே அதிர்ஷ்டம், செல்வ வளம் மற்றும் குடும்ப முன்னேற்றத்தை கொண்டு வரக்கூடியவர்கள் என்று நம்பப்படுகிறது.
இந்த ராசிகளைச் சேர்ந்த பெண்கள் திருமணம் செய்து செல்லும் வீட்டில் மகிழ்ச்சி, பொருளாதார முன்னேற்றம், குடும்ப ஒற்றுமை மற்றும் செல்வச் செழிப்பு அதிகரிக்கும் என்றும் ஜோதிட நம்பிக்கைகள் கூறுகின்றன.
அப்படி, புகுந்த வீட்டுக்கும் கணவனுக்கும் அதிர்ஷ்டத்தை கொண்டு வரக்கூடிய பெண் ராசியினர் யார் யார் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்

ரிஷப ராசியில் பிறந்த பெண்கள் குடும்பத்தை சிறப்பாக வழிநடத்தும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். வீட்டின் பொறுப்புகளை திட்டமிட்டு நிர்வகிப்பதிலும், குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அக்கறையுடன் கவனிப்பதிலும் அவர்கள் சிறந்து விளங்குவார்கள்.
விசுவாசத்தையும் நேர்மையையும் அதிகம் மதிக்கும் குணம் இவர்களிடம் காணப்படும். குடும்ப உறவுகளை பாதுகாப்பதுடன், அனைவரிடமும் அன்பாகவும் பொறுப்புடனும் நடந்துகொள்ள முயற்சி செய்வார்கள்.
மேலும், இவர்கள் சுக்கிரனால் ஆளப்படுவதால், இவர்களின் வாழ்க்கையில் செல்வச் செழிப்புக்ககு பஞ்சமே இருக்காது. இவர்கள் இருக்கும் இடத்தில் பணத்தட்டுப்பாடு வராது.
கன்னி

கன்னி ராசியைச் சேர்ந்த பெண்ணை வாழ்க்கைத் துணையாக பெற்றவர்கள், அன்பும் அக்கறையும் நிறைந்த துணையைப் பெறுவார்கள்.
குடும்ப உறுப்பினர்களின் நலனில் எப்போதும் அக்கறை செலுத்தும் இவர்கள், கணவருக்கு உறுதுணையாக இருப்பார்கள். தேவையற்ற குறைகளை கூறுவதைத் தவிர்த்து, குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பொறுமையுடன் சிந்தித்து, அதற்கு சிறந்த தீர்வை காண முயற்சி செய்வார்கள்.
எந்தவொரு சவாலையும் நேர்மறையான மனப்பான்மையுடன் எதிர்கொண்டு, குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழலை உருவாக்கும் குணம் இவர்களிடம் இருக்கும். இவர்களின் அதிர்ஷ்டம் கணவரின் வாழ்க்கையிலும் முன்னேற்றத்தையும் வளத்தையும் கொண்டு வரும் .
மகரம்

மகர ராசியில் பிறந்த பெண்கள் பொறுப்புணர்வுக்கும் ஒழுக்கத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள். சிறந்த வாழ்க்கைத் துணையாக இருந்து, குடும்பத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபடுவார்கள்.
எந்தவொரு பொறுப்பு கொடுக்கப்பட்டாலும், அதை முழு அர்ப்பணிப்புடன் செய்து முடிக்க முயற்சி செய்வார்கள். சிறந்த நிர்வாகத் திறன் கொண்டவர்களாக இருப்பதால், குடும்ப நிதி, திட்டமிடல் மற்றும் அன்றாட செயல்பாடுகளை திறம்பட கையாளுவார்கள்.
கணவரின் தொழில் வளர்ச்சிக்கும் குடும்பத்தின் முன்னேற்றத்திற்கும் தங்களால் இயன்ற அனைத்து வகையிலும் ஆதரவாக இருப்பார்கள். இவர்களின் திறமையும் பொருளாதாரம் சார்ந்த அறிவும் கணவரின் வாழ்க்கையில் முன்னேற்றத்தையும் வளத்தையும் ஏற்படுத்தும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |