தங்கம் வாங்க காத்திருப்போருக்கு நல்ல செய்தி! சவரனுக்கு ரூ.120 சரிவு
இன்றைய தினம் (செப்டம்பர் 21) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் பதிவாகி வருகின்றன.

அந்த வகையில், செப்டம்பர் 19ஆம் தேதி 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.130 அதிகரித்து ரூ.14,285 ஆக விற்பனை செய்யப்பட்டது.அதேபோல், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,040 உயர்ந்து ரூ.1,14,280க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய நிலவரம்
இந்நிலையில், வாரத்தின் தொடக்க நாளான இன்று தங்கத்தின் விலையில் மீண்டும் சரிவு ஏற்பட்டுள்ளது.
அதன்படி, 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.14,270 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.120 குறைந்து ரூ.1,14,160க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே நேரத்தில், 18 காரட் தங்கத்தின் விலையிலும் இன்று சிறிய அளவில் சரிவு ஏற்பட்டுள்ளது. ஒரு கிராம் 18 காரட் தங்கம் ரூ.15 குறைந்து ரூ.12,040க்கும், ஒரு சவரன் ரூ.120 குறைந்து ரூ.96,320க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனிடையே, வெள்ளியின் விலையில் இன்று எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.260க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் தொடர்ந்து விற்பனை செய்யப்படுகிறது
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |